கோவை மாவட்டம் சிங்கா நல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீநிதி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் யாரும் ஸ்ரீநிதிக்கு தேர்தலில் வேலை பார்க்ப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து நாம் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம் ஸ்ரீநிதிக்கு எப்படி தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டவுடன் பல அதிர்ச்சி தரும் தகவல்களை சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியில் கோவை மாவட்டத்தில் ஸ்ரீநிதி புதிய ஐ பிரிட் வகை பணப்பயிர் என்று சொன்னார்கள். குறுகிய காலத்தில் கட்சிக்கு வந்து ஜால்ரா போட்டு ஆள், பிடித்து பலரின் கால் பிடித்து பதவிக்கு வந்தவர். இவர் ஒரு பெண் வேடம் போட்ட அமைதிப்படை ஸ்ரீநிதி என்கிறார்கள். 
இது குறித்து நாம் ஸ்ரீநிதியை பல முறை தொடர்பு கொண்டோம் . அரை தொடர்பு கொள்ள முடியவில்லை பின்னர் அவரது வாட்ஸ் அப்புக்கு சில கேள்விகளை முன் வைத்து தகவல் அனுப்பினோம் .
நீங்கள் உங்கள் கட்சியின் தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடத்தில் உங்கள் சாதியையும், ஏற்கனவே மக்கள் நீதி மையத்தில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்ததையும் ஏமாற்றி உள்ளீர்கள் என்று உங்கள் கட்சி சார்பில் எங்கள் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்.


நீங்கள் ஏற்கனவே மக்கள் நீதி மையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை தொகுதியில் எம்எல்ஏவுக்கு நின்று நாலாவது இடம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் வாங்கிய ஓட்டு 8,163.
சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில் கிரீஸ் ஜொடங்கீரை தனியாக சந்தித்து பணம் கொடுத்து தேர்தலில் சீட்டு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செந்தில் பாலாஜியுடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர்தான் உங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்லி சீட்டு வாங்கித் தந்ததாகவும் ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள சில காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீநிதி செல்வபெருந்தகை அவர்களையும் சந்தித்து பணம் கொடுத்து சீட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எம்.பி. சசிகாந்த் செந்தில் தான் ராகுல் காந்தியிடம் சொல்லி எங்களுக்கு சீட்டு வாங்கித் தருவதற்கு மூல காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவித்த போது உங்கள் பெயர் அறிவிக்கும் போது ஸ்ரீநிதி நாயுடு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்றும் நாயக்கர் சமூகத்தை சார்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.
இது குறித்து நாங்கள் விசாரித்த போது உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லுகிறார்கள், டெல்லி மேலிடமும் தமிழக காங்கிரஸ் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் எனவே இதுகுறித்து உங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாங்கள் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.


என்று ஸ்ரீநிதியின் வாட்ஸ் அப் நம்பருக்கு செய்தி அனுப்பி இருந்தோம் அதற்கு அவர் தன்னுடைய விளக்கத்தை இது வரை தெரிவிக்கவில்லை .
காங்கிரஸ் கட்சியில் இணைந்து உடன் அவர் மாவட்டமகளிர் அணியின் செயலாளராகவும், மூன்று மாதத்தில் மகளிர் அணியின் மாநில பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதற்கு காரணம் இங்கு மாவட்ட தலைவராக இருந்த மயூராவின் தலையாட்டி பொம்மையான கருப்புசாமியும், மயூரா ஜெயக்குமார் ஆகியோரின் பரிந்துரையில் ஸ்ரீநிதி சேர்க்கப்பட்டார். கோவையில் காங்கிரஸ் கட்சியில் தகுதியான பெண்கள் யாரும் இல்லை என்று அவர்களின் நினைப்பதினாளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளீர் அமைப்பினர். இவர்கள் இருவரும் கோவை காங்கிரஸ் கட்சியில் குறுநில மன்னர் போல நடந்து கொண்டது தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
கட்சியில் இணைந்து நான்கு, ஐந்து மாதங்களில் இளைஞர் காங்கிரஸினுடைய தேர்தல் வந்தது. அதில் மயூரா ஜெயக்குமாரின் ஆதரவு வேட்பாளராக களம் இறக்கி அனைவரிடமும் பரிந்துரை செய்து அவரை வெற்றி பெற வைக்க தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் பேசியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. அதை போல் மாநில பொதுச் செயலாளராக மயூரா ஜெயக்குமார் பரிந்துரையில் களமிறக்கப்பட்டு அந்த பதவியை பெற்றார் ஸ்ரீநிதி.


இதற்கிடையில் மயூரா ஜெயக்குமார் அவருடைய டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி 9 மாதங்களுக்குள் அடுத்து இளைஞர் அணி தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட பரிந்துரை செய்ததாக ஸ்ரீநிதி தெரிவித்தாதாக பலர் கூறினர்… இப்படி அவரை 3 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய பதவி வாங்கி தர மயூரா ஜெயக்குமார் அதற்கு இவ்வளவு பாடுபட்டார் என்பதும் யாருக்கு தெரியாத புதிராக உள்ளது…


இப்போதும் மயூரா ஜெயக்குமாரின் டெல்லி நெருங்கிய வட்டாரங்களில் எனக்கு MLA சீட் இந்த முறை இல்லை என்றாலும் என்னுடைய சார்பாக ஸ்ரீநிதிக்கு தருமாறு பரிந்துரை செய்ததாக பலபேரிடம் சொன்னதாக தகவல்….
ஸ்ரீநிதி சிங்காநல்லூர் வேட்பாளராக அறிவிக்க பட்டவுடன் 6மாத காலமாக கோவை காங்கிரஸ் கட்சி ஆபிஸ் பக்கமே வராதவர் அவரின் தலையாட்டி பொம்மை வக்கீல் கருப்புசாமி மற்றும் அவரின் கைபாவை கணபதி சிவகுமாரும் சில காங்கிரஸ் தொண்டர்களை கூட்டிவந்து கட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது போல் செய்து அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் ஏமாற்றும் வேலையை மயூரா ஜெயக்குமார் சொல்லியது போல் செய்தார்கள். இவர்கள் யாரை ஏமாற்ற இதை செய்கிறார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் மில்லியன் டாலர் கேள்விகள்..
புதிய செய்தி;
நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஸ்ரீநிதி பத்திரிகையாளர்களை மதிக்காமல் ஒருமையில் பேசி வெளியேறினார் அப்போது மாவட்ட தலைவர் அழைத்து பத்திரிகையாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிகுறித்ததின் பேரில் ஒப்புக்கு உட்கார்ந்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வெற்றி பெற்றவுடன் நான் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி எழுந்து சென்று விட்டார்.
அனுபவம் இல்லாத ஒருவருக்கு கட்சி தலைமை சீட்டு வழங்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதை தற்போது தான் உணர்கிறோம் என்று சில கதர் சட்டைகள் புலம்பியதை நாம் கேட்க முடிந்தது
சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவை தவிர கூட்டணி கட்சிகள் யாரும் ஸ்ரீநிதிக்கு வேலை செய்யவில்லை. பணம் கொடுத்து தான் ஆட்களை அழைத்துச் செல்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
ஸ்ரீநிதி காங்கிரஸ் கட்சியினரிடம் நீங்கள் யாரும் எனக்கு தேவையில்லை, உங்கள் உதவியும் எனக்கு தேவையில்லை. அண்ணன் செந்தில் பாலாஜி என்னை வெற்றி பெற வைத்து விடுவார் என்று வீராப்பாக பேசிவருகிறாராம் ஸ்ரீநிதி.
எனவே சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜெயராமன் பக்கம் காற்று வீசுகிறது என்றும் அந்த தொகுதியில் இலை துளிர்கிறது என்றும் கை உடைந்த நிலையில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் தொகுதி மக்கள்.
