chennireporters.com

#dsp serving honestly ; 29 ஆண்டுகள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்ற டிஎஸ்பி.

தமிழக காவல்துறை வரலாற்றில் நேர்மையான அதிகாரிகள் எண்ணிக்கை மிக குறைவு யாரிடத்திலும் எந்த நேரத்திலும் எதற்காகவும் கைநீட்டாமல் வாழுகின்ற சில நேர்மையான அதிகாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒருவர் தான் காக்கிச்சட்டையே போடாமல் ஏறக்குறைய 29 ஆண்டுகாலம் உளவுத்துறையில் சிறப்பாக பணியாற்றி எந்த ஒரு கெட்ட பெயரும் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய நற்பெயர் வாங்கியவர்.டி.எஸ்.பி. வெங்கட கிருஷ்ணா ராவ்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான துறையை கவனிக்கும்  கியூ பிரிவில் பணியாற்றிய போது ஏழ்மை நிலையில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு  உதவியவர் தங்கள் நாட்டுக்கு போக வேண்டும் என பாஸ்போர்ட் கேட்டவுடன் தன்னுடைய சொந்த செலவில் இலங்கை தூதரகத்திற்கு  சென்று அதிகாரிகளை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடியாக பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை தங்களது நாட்டுக்கு அனுப்பியவர்.டி.எஸ்.பி. வெங்கட கிருஷ்ணா ராவ்.

ஒருபோதும் எவரிடத்திலும் எதற்காகவும் எதற்கு எந்த சூழ்நிலையிலும் எதையும் விரும்பியவர் இல்லை. நண்பர்கள் கேட்டால் கூட என்னால் முடியாது நான் கேட்க முடியாது எனக்கு இருக்கிற பெயரை நான் இழக்க விரும்பவில்லை தம்பி என்று வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.தமிழக காவல்துறையில் குறிப்பாக கோடிகளை குவித்து லட்சங்களில் புரளும் உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் ஒரு டீயும், ஒரு சமோசாவும் வாங்கிக் கொடுத்தால் அன்பாக வாங்கி சாப்பிட்டு விட்டுப் போகும் குணம் கொண்டவர். நாம் வாங்கிக் கொடுத்தாலும் அதற்கு அவரே பணம் தரும் மனம் கொண்டவர்.  அவர்தான் ஓய்வு பெற்ற உளவுத்துறை OCIU டிஎஸ்பி வெங்கட கிருஷ்ணா ராவ்.1997 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்தவர். காவலர் பயிற்சி முடித்தப்பிறகு பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அதன் பிறகு கியூ பிரிவு மற்றும் எஸ்பிசிஐடியிலும் அதன் பிறகு சென்னை சிட்டி உளவுத்துறையிலும் பணியாற்றினார். அதன் பிறகு டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கினைந்த குற்றப்பிரிவு விசாரணை பிரிவில் அதாவது (OCIU) யில் சிறப்பாக பணியாற்றினார். கடந்த ( 31-05-2026)  31ம் தேதி மே மாதம் ஒய்வு பெற்றார்.டி.எஸ்.பி. வெங்கட கிருஷ்ணா ராவ்.

நண்பர்களே தூக்கி வைத்துக் கொண்டாடும் குணம் கொண்டவர். உதவி என்று சொன்னால் தன்னுடைய பணிகளை கூட விட்டு விட்டு என்ன காரணம் எதற்கு அப்படியானது என்று விசாரித்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர் நல்லவர் எனக்கு அவரை நீண்ட நாட்களாக தெரியும் அப்படிப்பட்டவர் இல்லை என்று சொல்லி நம்மை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விடும் ஆபத்து பாண்டவன்.இரவு நேரங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டி மாட்டிக் கொண்டவர்கள் எல்லாம் கடைசியாக வந்து நிற்கும் இடம் இவரிடம் தான் அது தவறு நான் அதற்கு உதவி செய்ய மாட்டேன் என்று வெளிப்படையாக பேசி விடுவார். அண்ணா உண்மையிலேயே அவர் குடிக்கவில்லை என்று சொன்னால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி அதை சரி செய்து தருவார்.

இப்படிப்பட்டவர் ஓய்வு பெற்று விட்டார் என்பதை சொல்லும் போது மனம் வேதனை அடைகிறது அரசாங்கம் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு கூடுதலாக இன்னும் ஐந்து ஆண்டுகள் பணி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

தனது பணி ஓய்வு விழாவை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள C.U. SHAH BHAVAN பார்டி ஹாலில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவருடன் பணியாற்றிய நண்பர்கள் , ஐஏஎஸ் அதிகாரிகள்,  போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள்,  பத்திரிகையாளர்கள் , அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்தி சென்றனர். அவரது திறமையையும், நேர்மையையும் சிலாகித்து பேசினார்கள். அவருக்கு  மலர் மாலை, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்த நண்பர்கள், உறவினர்களுக்கு மிக சிறப்பான உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க.!