‘சவுக்கு’ சங்கரைப் பற்றிய விவாதங்களில் செய்திகளில் அவர் தரகர் எனவும் தரகு வேலையை செய்து நூறு கோடிக்கும் மேல் சொத்தை சேர்த்துகொண்டுவிட்டார் எனவும் கஞ்சாவை நுகரும் பழக்கத்தை உடையவர் எனவும் பாலியல் விவகாரங்களில் கண்டபடி வாழ்பவர் எனவும் மட்டுமே இடம்பெறுகின்றன.
ஆனால் அவரை உருவாக்கியதில் அரசு எந்திரத்தைச் சேர்ந்தோருக்கே பங்கிருக்கிறது என்பது பெரிதாக இடம்பெறுவதில்லை. அரசு எந்திரத்தின் அங்கமான போலீஸ் துறை இன்று சங்கரை கைது செய்து வெவ்வேறு வழக்குகளை பதிந்துள்ளது. அவ்வழக்குகள் உண்மையே என்பதுடன் மேலும் ஏராளமான வழக்குகளை பதியவேண்டிய அளவுக்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
ஏ.கே. விஸ்வநாதன் ஐபிஎஸ்.
இன்று ஒட்டுமொத்த போலீஸ் துறை அவருக்கு எதிராக இருப்பதாக தோன்றினாலும் உண்மையி்ல் ஒட்டுமொத்தமாக இல்லை. சங்கர் DVACயில் பணிபுரிந்தபோது அவருக்கு அப்போது அறிமுகமான ஏ.கே. விஸ்வநாதன் அத்துறையின் இணை இயக்குநராக அப்போது பணியாற்றினார்.
ஏ.கே. விஸ்வநாதன் அப்போது தனது பதவிவெறியை தீர்த்துக்கொள்ளும்பொருட்டு சங்கரை பகடைக் காயாக பயன்படுத்த தொடங்கியதன் பூதாகாரமான விளைவே இன்றைய (விஸ்வநாதத்தனமான)சங்கர்.
அருண்ஐபிஎஸ்.
இன்று சங்கர் சிறைச்சாலையில் அடைக்கப்படுவதற்கு உடனடி காரணமாக அமைந்தது அவர் கூடுதல் டிஜிபி அருண் மீதான அவரது குற்றச்சாட்டே ஆகும். சங்கர் இக்குற்றச்சாட்டை பொதுவெளியில் முன்வைக்கவைத்தது ஏ.கே. விஸ்வநாதனே.
சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு பொதுவெளியில் ஆளான ADGP அருண், ADGP டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோரின் பதவியில் இடம் பெறுவதற்கான விஸ்வநாதனின் எத்தனிப்பே இக்குற்றச்சாட்டுகள் என்கின்றனர் சில உயர் போலீஸ் அதிகாரிகள்.
இக்குற்றச்சாட்டுகள் பெண்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரானதும் ஆகும். இத்தகைய விஸ்வநாதனின் கூட்டாளியாக இன்றும் இருந்துவருவது முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி. ஒரே சாதியைச் சேர்ந்த இவ்விருவரும் தீவிர அதிமுக விசுவாசிகள் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்.
இதன் அங்கமாக விஸ்வநாதன் 2009-ல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதி மீது போலீஸ் தாக்குதலை சட்டவிரோதமாக நடத்திவிட்டு வேறொரு போலீஸ் அதிகாரியின் மீது பழியைப் போட்டு சட்டத்தின், போலீஸ் துறையின் பணிசார் விதியின் பிடியிலிருந்து தப்பித்துவிட்டார்.
சங்கர் மீது கடந்த பல ஆண்டுகளாக வெவ்வேறு புகார்களும்(காவல் நிலையங்கள், சென்னை காவல்துறை ஆணையரகம், பெண்கள் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றம்)வழக்குகளும் பாதிக்கப்பட்டோரின் சார்பில் பதியப்பட்டாலும் அவற்றின் மீது எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவிடாமல் காப்பாற்றியது விஸ்வநாதனே.
டேவிட்சன் ஆசீர்வாதம் ஐபிஎஸ்.
அவர் போலீஸ் துறையில் நிலவும் சாதி, கட்சி, பதவிவெறி அடிப்படையிலான கோஷ்டிகளை பயன்படுத்தி இவ்வாறு செய்துவருகிறார்.
எனவே பெண் போலீஸ் மீதான சங்கரின் அவதூறுகளுக்கும் அவரின் கடந்த கால சட்டவிரோதச் செயல்களுக்கான மூலகாரணமான விஸ்வநாதனுக்கு எதிராகவே சங்கர் மீதான வழக்கு விசாரணை திரும்பவேண்டும் அது தான் சரியான விசாரணையின் போக்கு என்கின்றனர் சில ஐபிஎஸ் அதிகாரிகள்.
இந்த செய்தி குறித்து ஏ கே விஸ்வநாதன் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.