chennireporters.com

#lawyer and a reporter were arrested; ஒப்பந்ததாரரை மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்ட டுபாக்கூர் ரிப்போர்டருடன் வக்கிலும் கைது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் ஒப்பந்ததார்ரை ரூ.1, லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் வக்கீல் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் சீனிவாசன் என்பவர் அரசு கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சோழவரம் வட்டார வளர்ச்சி ( BDO) அலுவலகத்தின் சுற்று சுவர்கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதை முழுமையாக கட்டியும் முடித்துள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ | Bribery to issue succession certificate: VAO caught red-handed

இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவர் தொழில் அதிபர் சீனிவாசனை தொடர்பு கொண்டு பி.டி.ஓ அலுவலகத்தில் கட்டியதில் சுற்று சுவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளீர்கள். இது தொடர்பாக செய்தி வெளியிட உள்ளேன். எனவே ரூ.1, லட்சம் பணம் கொடுத்தால் செய்தி வெளியிட மாட்டேன் என பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ்.

அதற்கு தொழில் அதிபர் சீனிவாசன் நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்கு உங்களுக்கு பயப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து தொழில் அதிபர் சீனிவாசன் தன்னுடைய வழிக்கு வரவில்லை என்று தெரிந்து கொண்ட டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ், மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கொண்டு. தொழில் அதிபர் சீனிவாசன் மற்றும் சோழவரம் பி.டி.ஓ -க்கள் சாந்தினி, புழல் பிடிஒ வேதநாயகி உள்ளிட்டவர்கள் பல்வேறு முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு…என  போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.Police station closure for the third time | மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல் | Dinakaran

மேலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஃபோட்டோ எடுத்து தொழில் அதிபர் சீனிவாசனுக்கு அனுப்பி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து தொழில் அதிபர் சீனிவாசன் இது சம்பந்தமாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ், மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவர் போலி பத்திரிகையின் அடையாள அட்டையுடன் அரசு அலுவலகங்களில் சென்று வசூல் மற்றும் ஸ்லைடு போஸ்ட் செய்திகள் போட்டு அலுவலர்களை மிரட்டி பணம் வசூல் தெரிந்தது. குறிப்பிட தக்கது.

டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜின் நண்பர் வக்கீல் சீனிவாசன்.

இதேபோல் செங்குன்றம் பகுதியில் சரியாக கூட செய்தி எழுதத் தெரியாத இரண்டு மனைவிக்கு சொந்தமான மாற்றுத்திறனாளி டுபாக்கூர் ரிப்போர்ட்டர் ஒருவரும் விரைவில் ஜெயிலுக்கு போவார் என்கிறார்கள் போலீசார்.

திருவள்ளூர் பகுதியை சார்ந்த முக்கிய பத்திரிகையில் பணியாற்றும் ஒருவர் இரண்டு பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதிப்பதையே பல ஆண்டுகளாக தொழிலாக நடத்தி வருகிறாராம்.

டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களை கையில் வைத்துக் கொண்டு சாராயம் வாங்கி கொடுத்து அதிகாரிகளை பற்றி எழுத சொல்லி அந்த செய்தியை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி நான் பார்த்துக் கொள்கிறேன் நான் முடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைப்போல பச்சோந்தி மாதிரி அடிக்கடி நிறம் மாறிக்கொண்டே இருக்கிறாராம் இவரும் சீக்கிரம் கலி சாப்பிடுவார் என்று கூறப்படுகிறது.

அதேபோல திருவள்ளூரில் எழுத படிக்கத் தெரியாத சில டுபாக்கூறுகளும் டிப் டாக் உடைய அணிந்து பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

பல கோடி வைத்துக் கொண்டிருக்கிற நம்பர் ஒன் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும்  ஒருவரின் மகன் கலெக்டர் பிரதாப் பெயர் சொல்லி பல அதிகாரிகளையும் ஒப்பந்ததாரர்களையும் மிரட்டியதாக கலெக்டர் பிரதாப்புக்கு விஷயம் தெரிந்ததுதம் அவர் மகன் நடத்தும் உடற்பயிற்சி கூடத்திற்கு போவதில்லையாம். 50 ரூபாய் கவர் வாங்கி அதை நூறாக்கி வட்டிக்கு விட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கொடுத்து வாழ்ந்து வரும் இவரின் வாழ்க்கை பற்றி ஆயிரம் எபிசோடு மெகா தொடர் எடுக்கலாம் என்கின்றனர் அவரிடம் பணம் பெற்ற விஐபிகள்.

எது எப்படியோ பிராடுகளுக்கும் டுபாக்கூர்களுக்கும் மிரட்டி பணம் பறிக்கும் பத்திரிகையாளர்களுக்கு தான் காலம் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் சில மூத்த ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள்.

இதையும் படிங்க.!