chennireporters.com

#a monkey pedal கடந்த கால வாழ்க்கையை கண்முன் கொண்டு வரும் குரங்கு பெடல்.

குரங்கு பெடல் திரைப்படம் மூலம் கோடையைக் கொண்டாட அணியமாக இருங்கள்.

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்ற ‘குரங்கு பெடல்’ திரைப்படம் வரும் 2024/ மே 3-ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் மகாராஜா, அண்ணா திரையரங்குகளில் திரையிட உள்ளதாக தெரிகிறது.இப்படத்தை இயக்கியவர் ‘மதுபானக்கடை’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கமலக்கண்ணன். ஈரோடு பவானி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட ‘குரங்கு பெடல்’ ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ளத் திரைக்காவியம் இது.சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90 களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வதையும், அந்தக் காலகட்டத்தை நினைவுப்படுத்தும் தரமான படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் பல்வேறு கலைஞர்களின் நடிப்பும், இசையும், இயக்கமும் பாராட்டுப்பெறும் நிலையில் ஈரோட்டில் தோழர் மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ” கலைத்தாய் அறக்கட்டளையின்” மாணவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். என்பது நமக்குக் கூடுதல் சிறப்பு.தமிழர்களின் தொன்மையான கலை வடிவங்களையும், வாழ்வியல் முறைகளையும் சிலம்பம், பறைஇசை, ஆட்டக்கலைகள் என பல்வேறு கலை வடிவங்கள் மூலம் இளைய தலைமுறைக்குத் தொண்டுள்ளத்தோடு கடத்தி வரும் கலைத்தாய். ஈரோட்டின் தவிர்க்க முடியாத அடையாளம்.

கலைத்தாய் அறக்கட்டளை ஈரோட்டைக் கடந்து தமிழகம் அளவிலும் தற்போது உலக அளவில் தன்னுடைய கலைப் பயணத்தை விரிவு செய்துள்ளது. சமூக மாற்றத்தை நோக்கிய  அக்கறையோடு செயல்பட்டு வரும் கலைத்தாய் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துவோம்! 

அந்த வகையில் கலைத்தாய் மாணவர்களின் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்திற்கு நமது ஆதரவை தெரிவிப்பதோடு, படம் வெற்றி பெற துணை நிற்போம்.

குழந்தைகளோடு.. குடும்பத்தோடு.. திரைப்படத்தைக கான அனைவரும் வாருங்கள்.  திரைக்கு வந்த நாள் முதல் குரங்கு பெடல் திரைப்படத்தின் மூலம் கோடையைக் கொண்டாடுவோம்.

குரங்கு பெடல் திரைப்படம் தொடர்பாக அந்த படத்திற்கு ஆதரவாக பல்வேறு சம்பவங்களையும் தங்கள் வாழ்க்கையில் நடந்த கடந்த கால நினைவுகளையும் பலர் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க.!