chennireporters.com

#police officer defending a florist; பூக்காரிக்கு வக்காலத்து வாங்கும் போலீஸ் அதிகாரி. காரணம் என்ன…???

பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி.
இவர் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்களிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றும் படியும் எனது அசல் சொத்து ஆவணங்களை மீட்டு தரும்படியும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர் கூறியுள்ளதாவது.
சென்னை முகலிவாக்கம், ஓம் சக்தி நகர், மதனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பிரசில்லா இவர் மீட்டர் வட்டி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் பூக்கடை ஒன்றையும் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 21/12/2024 ம் ஆண்டு இவரிடம் 25 லட்சம் குடும்ப செலவிற்காக கொஞ்சம் கொஞ்சமாக கடன் பெற்றுள்ளார் இந்த பணத்திற்கு வாரம் தோறும் 15 சதவீதம் வட்டி தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்த நிலையில் ஒரு சில மாதங்கள் என்னால் அவ்வளவு தொகையை கட்ட முடியாமல் போனது இதற்கு மீட்டர் வட்டி கேட்டு என்னை மிரட்டி என் வீட்டின் நில பத்திரங்களை பிடிங்கிக்கொண்டார்.
இதனை அடுத்து நான் வட்டி மற்றும் அசலை சேர்த்து ரூபாய் 40 லட்சம் பணத்தை பிரசில்லாவின். வங்கி கணக்கிற்கு செலுத்தி விட்டேன்.
 எனக்குத் தெரிந்த நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கூடுதலாக வாங்கிய கடனை விட 26 லட்சம் பணத்தை  மீண்டும் அவரின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விட்டேன் . ஆனால் மேலும் ரூபாய் ஒரு கோடியை வட்டியாக இன்னும் தரவேண்டும் என்று என்னை அடிக்கடி செல்போனில் மிரட்டி வந்தார்.  அதை தவிர பணம் தரவில்லை என்றால் திருநங்கைகளை அனுப்பி உன் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளையும் உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வந்தார்.
மீட்டர் வட்டி மாஃபியா பூக்காரி பிரசில்லா.
இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையிடம் எனது புகாரை அளித்தேன். இந்த புகாரை விசாரணை செய்து கந்து வட்டி கொடுமையில் இருந்து என்னை காப்பாற்றி எனது அசல் நில பத்திரங்களை மீட்டுத் தருமாறு மேற்படி நபர்களை விசாரித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் தன்னையும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் எனது இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
பிரசில்லா மகள்கள், உறவினர்களான விஜயகுமார், திஷா, தீபிகா ஆகியோரும் என்னை செல்போனில் தகாத வார்த்தைகளை சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளை திட்டி பேசி வருகின்றனர். 
அது தவிர உன்னிடம் இருந்து எப்படி பணம் வாங்க வேண்டும் உன்னால் முடியும் என்பதை தெரிந்து தான் நான் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்துள்ளேன். உன்னிடம் பணம் வாங்காமல் விடமாட்டேன் என்றும் காயத்ரியின் செல்போனில் பிரசில்லா பேசிய போது கூறியுள்ளார். அந்த ஆடியோ காயத்ரியிடம் உள்ளது.
இந்தப் புகார் குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி பிரிவில் இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் அவர்கள் இரண்டு நாளாக விசாரித்து அறிக்கை பெற்றுள்ளார்.
மேலும் கந்து வட்டி பேர்வழி பிரசில்லாவிடம் நீங்கள் செய்தது தவறு காயத்ரி வாங்கிய பணங்களை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். இது சிவில் வழக்கு அதனால் சட்ட ரீதியாக நீங்கள் உங்களுக்கான தீர்வை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அது தவிர நான் ஒன்றும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் அல்ல கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வாங்கித் தருவதும் என்னுடைய வேலையும் இல்லை என்று கந்து வட்டி பேர்வழி பிரசில்லாவிடம் கராராக சொல்லிவிட்டாராம் இன்ஸ்பெக்டர் சகாய செல்வின். 
இந்த நிலையில் மத்திய குற்ற பிரிவின் ஏடிஎஸ்பி ஸ்டீபன் திடீரென விசாரணை அறைக்கு வந்து மிஸ்டர் இன்ஸ்பெக்டர் நீங்கள் ஒழுங்காக விசாரிக்கவில்லை. உங்கள் வாட்ஸ் அப்பை பாருங்கள் கமிஷனர் செய்தி அனுப்பி இருக்கிறார் .அதன்படி நடந்து கொள்ளுங்கள். அந்த ஃபிராட்யிடம் என்ன நீங்கள் கரிசனம் காட்டுகிறீர்கள். உடனடியாக தரவேண்டிய பணத்தை வாங்கி கொடுங்கள். வழக்கு பதிவு செய்யுங்கள் என்று  பூக்காரி கந்து வட்டி மாஃபியாவுக்கு ஆதரவாக பேசி பாதிக்கப்பட்ட பெண்ணை அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டி மிரட்டி சென்று விட்டார். 
வழக்கின் உண்மை நிலையை ஆராய்ந்து மனசாட்சி படி விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு  காயத்ரிக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற வழக்கின் குறுக்கு விசாரணை நடத்துவதைப் போல சுமார் 8 மணி நேரம் காயத்ரி மற்றும் அவரது கணவர் அவரது உறவினர்களை வரவழைத்து திட்டமிட்டு அசிங்கப்படுத்தி உள்ளனர் போலீசார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் அவர்களிடம் நாம் வழக்கின் உண்மை நிலை குறித்து விசாரித்தோம். அவர் எதுவும் பேசவில்லை.
நாம் கேட்ட கேள்விகளை அமைதியாக கேட்டுக் கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டார்.
இதிலிருந்து ஏடிஎஸ்பி ஸ்டீபன் உத்தரவின்படி அவர் செயல்படுகிறார் என்று சொல்லுகிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கௌதம்.
”பூ”  வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? அவருடைய வருமானம் என்ன தொழில் என்ன என்று எதுவும் கேட்காமல் அவருக்கு ஆதரவாக செயல்படும்படி  ஏடிஎஸ்பி ஸ்டீபன் கட்டளையிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சிவில் வழக்கை எப்படி போலீசார் விசாரிக்கலாம்.?  நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வாங்கும் வேலையை செய்யக்கூடாது என்றும் சிவில் வழக்கில் போலீசார் தலையிடக்கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் ஏடிஎஸ்பி ஸ்டீபன் எந்த அடிப்படையில் கந்து வட்டி பேர்வழி பிரசில்லாவிற்கு ஆதரவாக பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  எனவே அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.  ஏடிஎஸ்பி  ஸ்டீபன் அவர்கள் மீது காவல்துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பேசப்பட்டு வருகிறது.
பல முக்கிய பத்திரிகைகளில் அவரைப் பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. பல ரவுடிகளுடன் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை கொள்ளையடிக்கும் கூலிப்படையினருக்கு அவர் ஆதரவாக செயல்படுகிறார் என்றும் அவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
T12 Poonamallee Police போலீஸ் கமிஷ்னர் சங்கரை ஏமாற்றிய பூந்தமல்லி ஏ.சி, ஜவகர்! கொடி கட்டி பறக்கும் விபச்சாரம் , 3 நம்பர் லாட்டரியும். - chennireporters.com
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்.
அது மட்டுமல்லாமல் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்களின் பெயரை சொல்லி பல முக்கிய இடங்களில் இருந்து பல லட்ச ரூபாய் அவர் லஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களுக்கு புகாராக அனுப்பப்பட்டுள்ளது.  அது தவிர லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கும் அமலாக்கத் துறையினருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆதரவாக இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும் சில அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று சொல்லுகிறார்கள் மத்திய குற்ற பிரிவில் பணியாற்றும் சில நேர்மையான சப் இன்ஸ்பெக்டர்கள்.
Advt news.

இதையும் படிங்க.!