வயதான பாட்டியை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் குறித்து ஆவடி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரில் சென்னை அடுத்த ஆவடி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பேன்சி இவரிடம் காமராஜ் நகர் நேத்தாஜி தெருவை சேர்ந்தவர் அமல்ராஜின் மனைவி ஸ்டெல்லா என்கிற ஆரோக்கிய மேரி கடந்த 26.03.2015ம் ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
அதற்கு பதிலாக ஸ்டெல்லாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அதிகரட்டி என்ற பகுதியில் உள்ள இடத்தில் உள்ள சொத்தின் பத்திரத்தை கொடுத்தார்.
ஆனால் என்னிடம் கடன் பத்திரமாக கொடுத்த நில பத்திரத்தை காணாமல் போனதாக பொய் சொல்லி copy of document வாங்கியுள்ளார்.
இது குறித்து நான் அவரை நேரில் சென்று கேட்டதற்கு தன்னை அவமரியாதையாக பேசி மிரட்டி வருகிறார். பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
ஸ்டெல்லா ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதே போல பலரிடம் தனக்கு ஊட்டியில் டீ எஸ்டேட் இருப்பதாக கூறி வயதான பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரியவருகிறது.
மூதாட்டியிடம் பண மோசடி செய்த ஸ்டெல்லா என்கிற ஆரோக்கிய மேரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மூதாட்டியின் வழக்கறிஞர் வே.குணசேகரன் என்பவர் பத்திரிகையாளிடம் தெரிவித்தார்.
மூதாட்டி பேன்சி ரம்யாவின் புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?