chennireporters.com

ஏழைகளுக்கு உணவு வழங்கும் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம்.

கொரோனா பொது முடக்கத்தால் தினந்தோறும் நூறூக்கும் மேற்பட்டோருக்கு உதவும் பல நல்ல மனம் படைத்தவர் களின் உதவியுடன் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஏழைகள் மற்றும் வயதானவர்களுக்கும் ஆதரவற்றோர் களுக்கும் உணவு வழங்கி வருவதாக அந்த அமைப்பின் தலைவர் மாரிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்கண்ணகிநகர்,எழில்நகர் பகுதிகளில் 23,704 மறுகுடியமர்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருபவர்கள்.

2016 முதல் டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் என்கின்ற பெயரை பதிவு செய்துபகுதி மாணவர்களின் கல்விக்காக மாலை நேர பயிற்சி வகுப்புகளும்,தற்காப்பு, பண்பாட்டு பயிற்சிகளும்,tnpsc க்கான பயிற்சிகளும் வழங்கி வந்தோம், trop out, முதியோர் கல்வி (கற்போம் எழுதுவோம்) அரசு நலத்திட்டங்களை பெற வேண்டிய உதவிகளையும் செய்து வந்தோம்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பகுதி மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.அவர்களில் தனியாக வசித்துவரும் முதியோர்கள்,மாற்று திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கணவரை இழந்து பிள்ளைகளுடன் மிகவும் சிரமத்திற்குள்ளானோர்களுக்கு மளிகை பொருட்கள் 150 குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவுள்ளோம்.

கடந்த 10 நாட்களாக தனிமையில் வசித்து வரும் முதியவர்களுக்கும்,கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் 100 நபர்களுக்கு உணவுகள் வழங்கி வந்தோம்.இன்று முதல் 150 நபர்களுக்கு உணவுகள் வழங்கி வருகிறோம்.ஓரிரு நாட்களில் 500 நபர்களுக்கு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். என்று மாரி சாமி தெரிவித்தார்.

அன்புடன்
எ.மாரிசாமி
தலைவர் : டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் – கண்ணகிநகர்

இதையும் படிங்க.!