chennireporters.com

மாநகரப் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மாநகரப் பேருந்துகளில் படியில் தொங்கிய படி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக வியாசர்பாடி, பெரம்பூர், அண்ணாநகர், செங்குன்றம், பூந்தமல்லி, ஆவடி, திருநின்றவூர், கோவில்பதாகை அம்பத்தூர், திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஓடிக் கொண்டே போய் படியில் தொங்கியபடியும் பேருந்தின் மீது ஏறியும் பயணம் செய்கிறார்கள்.

இதனால் மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது.அது தவிர ஆபத்தான முறையில் பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளை பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதுதவிர சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி மாணவி ஒருவரும் பள்ளி மாணவர் ஒருவரும் ஓடும் ரயிலில் நடைமேடையில் தனது கால்களை தேய்த்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.

மாணவர்களோ அல்லது பொது மக்களோ அப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இனிமேலாவது ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் தங்களது செயல்களை மாற்றிக் கொள்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!