chennireporters.com

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேட்டி.

தவறு செய்யும் வக்கீல்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 175 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் நம்மிடம் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து வக்கீல்கள் சமுதாயத்தை பாதுகாத்திட,.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஜூன் 28ம் தேதி வக்கீல்கள், குமாஸ்தாக்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பார்கவுன்சில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடை பெறுகிறது.

இதன் மூலம், சுமார் 20 ஆயிரம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் இந்த தடுப்பூசி முகாம் விரிவுபடுத்தப்படும்.

கொரோனா 1 மற்றும் 2 வது அலையில் மட்டும் இதுவரை 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உயிரிழந்துள்ளனர் வக்கீல்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம், கோர்ட்டில் நேரடி விசாரணை முறையை மீண்டும் கொண்டுவர முடியும்.

கொரோனாவால் உயிரிழந்த வக்கீல்கள் குடும்பங்களுக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது தவறு செய்யும் வக்கீல்கள் மீது பார்கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது கடந்த 5 ஆண்டுகளில், 175 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை போட்டவர்கள்தான் வக்கீல் என்பதல்ல சமீபத்தில் சென்னையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் என கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது அந்த நபர் வக்கீலே கிடையாது.

தன்னை வக்கீல் என யார் கூறினாலும், அவரிடம் பார்கவுன்சில் அடையாள அட்டையை கேட்க வேண்டுமென காவல் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் சுப்ரீம் கோர்ட் கிளையை அமைக்கவும்,
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தியதற்கு பார்கவுன்சில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் இருந்த சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மீண்டும் சட்டக்கல்லூரி அமைக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!