chennireporters.com

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்தியராஜ் பாராட்டு..

பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு பலரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சத்தியராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

1879 செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கருக்கும் சின்னதாய் அமைக்கும் ராமசாமி பிறந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெரியார் பின்னர் தன்னுடைய 12-ஆவது வயதில் தனது தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்டார்.

பின்னாளில் சமூக அவலங்களை கண்டும் ஆரியத்தின் அத்துமீறல்களை கண்டு சமூக நீதிக்காகப் போராடினார்.

பெரியார் என்று பரவலாக அறியப்படும் அவரின் முழு பெயர் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதாகும். அதை நாம் சுருக்கி தான் பெரியாரை ஈ.வே.ரா. என்றும் பெரியார் என்றும் பரவலாக அழைக்கின்றோம்.1973 ம் ஆண்டு பெரியார் மறைந்தார்.

தனது 94 ஆவது வயது வரை இந்த சமூகத்திற்காக பெரியார் போராடினார் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அப்போது அவர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் இனிமேல் பின்வரும் காலங்களில் கடைபிடிக்கப்படும். என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!