மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசியிருந்தார் அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் காவல்துறையினர் மீரா மிதுன் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153 (A)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (B) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி
கூறி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர் ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னைக் கைது செய்ய முடியாது,
என்று போலீசுக்கு சவால் விட்டிருந்தார் அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிவந்த காவல் துறையினர் அவரது செல்போனை வைத்து, அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர்.
அவர் கேரளாவில் தங்கியிருப்பது தெரியவந்தது இந்நிலையில், அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர் கைது செய்வதற்கு முன்பாக போலீசாரை மீரா மிதுன் ஆபாசமாக பேசி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். கத்தியை எடுத்து வா முதல்வரே பிரதமரே இது நியாயமா என்று அழுது புலம்பினார்.
மீரா மிதுனின் மிரட்டலும் புலம்பலும் போதை ஆசாமி நடந்து கொண்டதைப்போலவே இருந்தது விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வந்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.