சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் போலீஸார் கவனம் செலுத்த வேண்டும் வாகன சோதனை, மற்றும் ஃபைன் போடுவதில் கவனம் செலுத்துவதை விட பொது மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் கவனமுடன் செயல்படவேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவியேற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்தை பற்றி உள்ளூர் போலீஸ் முதல் உளவுத்துறை அதிகாரிகள் வரை ஈடிப்போய் கிடக்கிறார்கள் என்கின்றனர் உளவுத்துறையில் உள்ள ஒரு அதிகாரி.ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நம்மிடத்தில் ஏடிஜிபியின் வேலை பற்றியும் அவர் தற்போது அதிகாரிகளை எப்படி வழி நடத்தி வருகிறார் என்று நம்மிடம் தெரிவித்தார்.
அவரை பொதுமக்கள் சந்திக்கும் நேரத்தில் அவர்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும் வெளியூரில் இருந்து வருபவர்களிடம் கெடுபிடி செய்யாமல் உள்ளே அனுப்ப வேண்டும். அவர்கள் சொல்லும் புகார்களை அமைதியாக கேட்டு விட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த புகாரை அனுப்பி வைக்கிறார். அது தவிற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை கேட்கிறார்.போலீசுக்கு ‘தமிழக முதல்வர் குற்றங்களை தடுக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். சென்னை சிட்டி தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு ஒரு மாவட்டமாக சென்று அதிரடியாக ஆய்வு செய்து வருகிறார் . போலீஸார் சிறப்பாக பணி செய்துவருகிறார்கள். டி. எஸ். பி. கள் எந்தவிதமான ரெக்கமென்டஷனும் இல்லாமல் அவரவர் திறமைக்கு ஏற்றவாறு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
போதைப்பொருள்களை தடுக்கும் வகையில் சிறப்பு கவனம் எடுத்து வருகிறார். ஏட்டு முதல் எஸ். பி. வரையில், ஐஜிகள் டிஐஜி, என அனைத்து அதிகாரிகளிடம் அன்றாடம் அறிக்கை கேட்டு வாங்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்..காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையை சரி செய்து வருகிறார். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் டார்கெட் வைத்து போக்குவரத்து போலீசார் வேலை செய்யக்கூடாது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் டார்கெட் . குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் என தெரிந்த உடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரேஸ் டிரைவ், ஓவர் ஸ்பீடு, வித்தவுட் டாக்குமென்ட்ஸ், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு போடுங்கள், குடும்பத்துடன் போகிறவர்களை நிறுத்தி தொல்லை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். தேவையில்லாமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்கு வரத்து போலீசார் நடந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரவுடிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வருடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா, புகையிலை போன்றவற்றை தொடர்பாக பொதுமக்கள் யாராவது புகார் அளித்தால் புகார் தந்தவர்களின் பெயர்களை வெளியில் தெரியாமல் அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அது தவிர எந்த நேரத்தில் எந்த அதிகாரியை தொடர்பு கொள்வார் என்ன கேட்பார் என்று அதிகாரிகள் கையை பிசைந்து நிற்கிறார்கள். ஏடிஜிபியின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் போலீஸ் முதல் உயர் போலீஸ அதிகாரிகள் வரை தமிழகம் முழுவதும் அஞ்சு நடுங்குகிறார்கள். ஏடிஜிபி தற்போது தனது ஆட்டத்தை அடித்து ஆட தொடங்கி விட்டார் என்று சொல்கின்றார்கள் விவரம் அறிந்த சில அதிகாரிகள்.