chennireporters.com

#bjp will continue; பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஆதிஷி பேட்டி.

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தால் டெல்லியில் பாஜக பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்று வந்தது.கட்சிUNIq BJP/Bharatiya Janata Party Miniature Double Sided Flags Made of 100%  Special Silk Fabric (Warp-Knitted Polyester) Ready to use as Option in  Brass Flag Stand (BJP Flag Only) : Amazon.in: Garden &

சுமார் 48 இடங்களை கைப்பற்றி 27 வருடத்திற்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது 2015 ஆண்டு 67 இடங்களிலும் 2020 ஆம் ஆண்டில் 62 இடங்களையும் பெற்று வெற்றி பெற்றிருந்தது அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தல் முடிவு குறித்து அதிஷி கூறியதாவது; எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம் பாஜகவின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகியோருக்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவு தான் ஆனால் டெல்லி மற்றும் நாட்டு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. என்னுடைய அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, இது போராட்டத்திற்கான நேரம். பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் இவ்வாறு அதிஷி தெரிவித்தார். கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் விதுரியும் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.Narendra Modi - YouTube

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு தேர்தலில் 48 இடங்களை பாஜகவும் 22 இடங்களில் ஆம்ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளது.

பல ஆண்டு காலம் டெல்லியில் கோலோச்சிய காங்கிரஸ்  ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் இந்த தேர்தலில் அபார தோல்வியை தழுவியது.History of the Indian National Congress - Wikipedia

காரணம் பலமான கூட்டணியை காங்கிரஸ் தேர்வு செய்யவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்சனையும் டெல்லி தேர்தலில் தோல்விக்கு பெரும் காரணம் என்கின்றனர் சில மூத்த தலைவர்கள்.

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் தங்களது உட்கட்சி பிரச்சினையை சரி செய்து திறமையான நிர்வாகத் திறன் உள்ள நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி தேர்தலில் வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

இதையும் படிங்க.!