#exclusive story
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கியை கையில் எடுத்து என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பெயர் வாங்கிய வெள்ளை துரை ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கியை காட்டி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது. நேர்மைக்கு பேர் போனவர் என்று மார்தட்டிய வெள்ளை துரை சம்பாதித்த சொத்துக்கள் பற்றி அதிர்ச்சி தரும் தகவல்களை சொல்லுகிறார்கள் அவருடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள். யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்பது குறித்தும் அவர் லஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியல் குறித்தும் சொல்லுகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளோ அல்லது போலீஸ் அதிகாரிகளோ, ஊர் உலகம் அறிய பல கோடி ரூபாய்கள் லஞ்சமாக பெற்று சொத்து சம்பாதித்து விட்டார்கள் என்று தெரிந்தும் கூட உளவுத்துறையோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையோ ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மக்கள் ஏமாளிகள் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக தமிழக காவல்துறையில் கீழ் மட்டத்திலிருந்து உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டார்கள் என்று வெளிப்படையாகவே பேசப்பட்டாலும் கூட லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் வெளிப்படையாக வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை கிடைத்த மாதிரி ஒரு வழக்கும் இல்லை என்று சொல்லலாம்.
வெள்ளை துரை
கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி தமிழக காவல்துறையில் தனது 33 வயதில் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்ந்தார் வெள்ளை துரை.வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தன்னை நேர்மையானவராகவும், பெரிய வீரனாகவும் காட்டிக்கொண்ட வெள்ளை துரை 2003-ம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி சென்னை அயோத்தி குப்பம் வீரமணியை என்கவுண்டர் கவுண்டரில் சுட்டு கொலை செய்தார்.
அயோத்தி குப்பம் வீரமணி
அதன் பிறகு 2004-ம் ஆண்டு வீரப்பன் தேடுதல் வேட்டையில் கலந்து கொண்டார். வீரப்பன் சகாப்தம் முடிந்த பிறகு தமிழக அரசு அந்த வேட்டையில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், பதக்கமும் வழங்கியது தமிழக அரசு. அதில் இவருக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது. அதில் எஸ்.ஐ.ஆக இருந்த அவர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகத்தில் பல பகுதிகளில் பணியாற்றிய வெள்ளை துரை தனது நேர்மை என்கிற சட்டையை கழற்றி வைத்துவிட்டு கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார். அவர் திருநெல்வேலியில் பணியாற்றிய பொழுது உளவுத்துறை உதவி ஆணையர் AC IS ஆறுமுகம் என்பவர் உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் வெள்ளை துரையின் ஆட்டம் தாங்க முடியவில்லை. கட்டப்பஞ்சாயத்து அதிகம் செய்கிறார் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார் என்று ஒரு நோட்டு போட்டு அரசுக்கு ரகசிய குறிப்பு எழுதியிருந்தார். அதை அரசு உடனடியாக கையில் எடுத்து அவரை அங்கிருந்து திருவண்ணாமலைக்கு மாற்றியது.
திருவண்ணாமலையில் பணியாற்றிய வெள்ளை துரை ஓ.டி என்று சொல்லப்படும் அதர் டியூட்டி காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு பணிக்கு வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் ரவுடிகளின் ராஜ்யத்தில் பல தொழிலதிபர்கள் தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
குள்ள விஷ்வா
அதனை தொடர்ந்து குண்டர்களை ஒடுக்கும் விதமாக வெள்ளை துரை இங்கு பணிக்கு அமர்த்தபட்டார். பணிக்கு சேர்ந்த நாள் முதல் வெள்ளை துரை இதுவரை எந்த ஆணையையும் கழற்றவில்லை. மாறாக 53 வழக்குகளை வைத்துள்ள படப்பை குணா மீது ஒரே ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. மாறாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் படப்பை குணம் உடன் 40 காவலர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதி 40 காவலர்களை மாற்றினார். ஆனால் படப்பை குணாவிடம் இவர் நெருங்கிய நட்பு பாராட்டி பல கோடிகளை சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படப்பை குணாவிடம் வெள்ளை துரை எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என்று அவருக்கும் தெரியாது எவ்வளவு லஞ்சமாக கொடுத்தேன் என்று படப்பை குணாவுக்கும் தெரியாது. அந்த அளவுக்கு லஞ்சம் கை மாறி இருக்கிறது. உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் மட்டுமே வெள்ளை துறை படப்பை குணாவிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கினார் என்று தெரியும் என்கிறார்கள் ஸ்ரீபெரும்புதூர் தொழிலதிபர்கள்.
படப்பை குணா வெள்ளை துரை
அதேபோல படப்பை குணாவின் உறவினரான பிரபு என்கிற பிரபல இரும்பு வியாபாரியிடம் பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றதாக சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள சிறிய இரும்பு கடை தொழில் அதிபர்கள் ஒரு முறை வெள்ளை துரையின் பேச்சுக்கு சம்மதம் தெரிவிக்காத பிரபுவை அசைத்துப் பார்க்கும் வகையில் அவர் வைத்திருந்த பி.எம்.டபிள்.யூ காரில் சாராயம் கடத்துவதாகவும் போலியாக ஒரு வழக்கை போட்டார் வெள்ளை துரை. ஆனால் அந்த வழக்கில் வெள்ளை துரை அவமானப்பட்டு தலை குனிந்து நின்றார்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் பிரபு வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் என அனைத்தும் வீடியோக்களையும் எடுத்து வந்து உயர் போலிஸ் அதிகாரிகளுடன் போட்டு காட்டி தன் காரில் அது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று நிரூபித்தார் பிரபு. அதன் பிறகு பிரபு மீது வெள்ளை துரைக்கு இன்னும் கடும் கோபம் ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் அதிகாரியுடன் மோதல் வேண்டாம் என்று படப்பை குணா மற்றும் தனது நண்பர்கள் சொன்னதின் அடிப்படையில் மோதல் போக்கை கைவிட்டு வெள்ளை துறையுடன் இணக்கமாக செயல்பட ஆரம்பித்தார் பிரபு.
அது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் அவரது கூட்டாளி தியாகு அதேபோல விஷ்வா என்கிற குள்ள விஷ்வா இடம் 5 லட்ச ரூபாய் பஞ்சமாகப் பெற்றுள்ளார். குள்ள விஷ்வா, ஆல்பர்ட் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று கருதி அவரை விசாரணைக்கு அழைத்த வெள்ளை துரை உன் மீது பல புகார்கள் நிலுவையில் இருக்கிறது. போந்தூரை சேர்ந்த திமுக பிரமுகர் மோகன் என்பவரை கொலை செய்து விடுவேன் என்று நீ மிரட்டுகிறாய் எனவே உன்னை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டி இருக்கிறார். அது தவிர உன்னை என்கவுண்டரில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள குள்ள விஷ்வா 5 லட்சம் ரூபாய் பணத்தை வெள்ளத்துரைக்கு கொடுத்ததாக சொல்லி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை தன்னை போலீசார் கொலை செய்து விடுவார்கள் என்று அவர் பேசிய வீடியோ அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பணமும் வாங்கிக் கொண்டு வெள்ளை துரை குள்ள விஷ்வாவை சுட்டு கொலை செய்ய உத்தரவிட்டார் என்று சொல்கின்றனர் அதிகாரிகள்.
அதற்காக பல லட்ச ரூபாய் பணத்தை போந்தூர் திமுக பிரமுகர் மோகனிடம் வெள்ளை துரை பெற்றதாக சொல்கிறார்கள் திமுக பிரமுகர்கள். அது தவிர மதுரை அப்பளம் ராஜாவிடம் ஒரு பெரிய தொகையை வாங்கி இருக்கிறார். அது தவிர ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பிபிஜி குமரனின் மனைவி மற்றும் உறவினரிடமும் பிபிஜி சங்கர் மற்றும் அவர் வட்டாரத்தில் எதிராளிகளை என்கவுண்டரில் கொலை செய்து விடுவதாக பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ரவுடி சாந்தகுமார்
சில தினங்களுக்கு முன்பு செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் லாக் அப் டெத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடி சாந்தகுமாரிடமும் ஒரு பெரிய தொகை வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படி பல கோடி ரூபாய் கல்லா கட்டிய வெள்ளை துரை கோடிகளை குவித்த வெள்ளை துரை இன்றுடன் தமிழக காவல்துறையிலிருந்து விடைபெற இருந்த நிலையில் அவரை இன்று அரசு சஸ்ப்ன்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை துரை அவர் தரப்பு கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
மேலும் தன் மீது கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என்று சொன்னால் வெள்ளை துறையின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவியின் உறவினர்கள் அனைவரின் செல்போன் நம்பர் மற்றும் வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர் வெள்ளை துரையிடம் பணம் கொடுத்து ஏமாந்து என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்.
வெள்ளை துரையின் காக்கி சட்டை போட்டு கொண்டு ஆடிய ஆட்டங்களை ஒரு விசாரணை கமிஷன் வைத்து விசாரித்தால் பல உண்மைகள் தெரிவரும் என்கின்றனர். அவரால் பாதிக்கப்பட்ட பொது மக்களும், போலீஸ் அதிகாரிகளும் அரசு உடனடியாக வெள்ளை துரை மீது விசாரணை ஆணையம் அமைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.