chennireporters.com

காதலியை கொலை செய்து விட்டு பேய் பிடித்திருப்பதாக நாடகமாடிய ஆப்ரிக்க காதலன் கைது.

பேய் விரட்டுவதாக கூறி காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் துபாய் ஹல் பார்ஷாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்பட்டது.

அபார்ட்மெண்ட்டில் உள்ள வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் நுழைந்து சோதனை நடத்தினர் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் உயிரற்ற உடலாய் இறந்து கிடந்தார்.

அப்பெண்ணுடன் தங்கியிருந்த 40 வயதான ஆப்பிரிக்க நபர்தான் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார் எனது காதலிக்கு திடீரென பேய் பிடித்து விட்டது அதனை விரட்டும் முயற்சியில் இறங்கினேன்.

அப்போது அவள் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாள் என ஆப்பிரிக்க ஆசாமி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த பெண்ணின் உடம்பில் ஏராளமான காயங்கள் மற்றும் இரத்தக்கசிவு இருந்ததை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மரணத்திற்கு முக்கியமான காரணம் பெண்ணின் காதலன் தான் என்பது தெளிவாகி இருக்கிறது.

மூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த காதலர்களுக்குள் பணப் பரிமாற்றம் தொடர்பாக சண்டை இருந்திருக்கிறது இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்திருக்கிறது.

அப்போது போதை மருந்து உட்கொண்டு இருந்த அந்த நபர் தனது காதலியை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

துபாய் காவல்துறையின் தடயவியல் மற்றும் குற்றவியல் பிரிவு இயக்குனர்
மஹி சல்மான் அகமது இது குறித்து பேசுகையில் அந்த இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இறந்துபோன பெண்ணின் காதலன் தான் இந்த கொலையை செய்தார் என்பது நாங்கள் கண்டுபிடித்து இருக்கிறோம்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தன் காதலிக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அதை விரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்ட போது அவள் மயக்கமடைந்து விட்டதாகவும் போலீசில் பொய்யான தகவல் அளித்தார் என்பதை போலீசார் விசாரணையில் கண்டு பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க.!