chennireporters.com

மக்கள் வரிப்பணத்தை சுருட்டும் அ.தி.மு.க., பா.ஜ., பஞ்சாயத்து தலைவர்கள்..!!

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்.

கடிவாளம் பூட்டுவாரா முதல்வர்?

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி வருகின்றனர் இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைப்பாரா என்னும் கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது இதற்கிடையில் உள்ளாட்சியில் பஞ்சாயத்துக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க.,வினரும் மற்றும் பா.ஜ., தி.மு.க.,வினர் தலைவர் பதவி வகிக்கின்றனர்.

இவர்களில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளூர் அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் அதிமுக கிளைச் செயலாளருக்கு ஜால்ரா அடித்து மக்கள் வரிப்பணத்தை பஞ்சாயத்து அலுவலக செயலர் உதவியுடன் சுருட்டி வந்தனர்.

தற்போது தி.மு.க ஆட்சி அமைந்துள்ளதால் இந்த கொள்ளைக் கூட்டம் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது இந்நிலையில், கோவையில் இக்கரை பூலூவம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து தலைவர், செயலர் அலட்சியத்தால் அப்பாவி ஊழியர்கள் 2 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையும் கண்டிப்பும் மிகுந்த கோவை ஆட்சியர், கடும் நடவடிக்கை எடுப்பாரா? என்னும் கோரிக்கை வலுத்துள்ளது கோவை மாவட்டம், ஆலந்தூறை பகுதி இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் குப்பை சேகரித்து திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது, வழியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து 2 பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர் மேலும் 6 பணியாளர்கள் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்களை அழைத்து கொண்டு செல்வது சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்ற சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தேசிய மனித உரிமை ஆணையத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களில் அழைத்துச் செல்லக் கூடாது என வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு முன்கூட்டியே அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத அலட்சியத்தால் அப்பாவி மனித உயிர்கள் பலியாகியுள்ளது குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச் சொல்லியும் கூட தொடர்ந்து இந்த செயல் நடைபெற்றது

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்து தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது இந்த சூழலில் இப்போது ஏற்பட்டுள்ள மரணத்திற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அவர்களது குடும்ப வாரிசுக்கு அரசு பணி வழங்குமாறும், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பினர்கோரிக்கை விடுத்துள்ளனர்இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சமூகநீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, இக்கரை பூலுவாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் மீது கோவை ஆட்சியரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க.!