chennireporters.com

#aiadmk pro thillalangadi jobs; அதிமுக பிஆர்ஓ வின் தில்லாலங்கடி வேலைகள்.

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ஆவடி, அண்ணனூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் பல பகுதிகளில் சூழ்ந்துள்ளது மாவட்டத்தில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று டிசம்பர் (2025 .12. 02 )உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணன் ஊர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட வந்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.

திருவள்ளூர் மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு துறையில் ஏபிஆர்ஓவாக பணிக்கு சேர்ந்த அதிமுகவை சேர்ந்த அஸ்வின் குமார் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏறக்குறைய நான்காண்டு காலம் ஏற்கனவே பணியாற்றி வந்தார் அதன் பிறகு வேறு ஊருக்கு பனிமாற்றலாகி சென்றார்.  இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பதவி உயர்வு பெற்று பிஆர்ஓவாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணிக்கு வந்தார்.

இவர் ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்பு துறையில் எப்படி எல்லாம் லஞ்சம் பெற வேண்டும். தீபாவளி வசூல் வேட்டை எப்படி செய்ய வேண்டும், ஆயுத பூஜை வசூல் வேட்டை எப்படி செய்ய வேண்டும், டீசலில் எப்படி முறைகேடு செய்வது அலுவலகத்திற்கு பேனா பேப்பர் பென்சில் வாங்கிய கணக்கில் எப்படி சுருட்டுவது என பல விஷயங்களை தெளிவாக கற்றுக்கொண்டு பல லட்சங்களை அப்போதே சுருட்டியவர்.

திமுக ஆட்சி காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பிஆர்ஓவாக பொறுப்பேற்ற பிறகு சத்தம் இல்லாமல் மணல் குவாரி, மண்குவாரி மற்றும் பொதுப்பணித்துறை கனிமவளத்துறை, டாஸ்மாக் நெடுஞ்சாலைத்துறை என பணம் கொட்டும் பல துறைகளில் பத்திரிகையாளர்களை பார்க்க வேண்டும் கவனிக்க வேண்டும் என்றும் அலுவலக செலவிற்கு பணம் வேண்டும் என்றும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பல லட்சங்களை கல்லா கட்டியதாக சொல்கிறார்கள் சில டுபாக்கூர் பத்திரிகையாளர்கள்.

வந்ததும் சரியில்லை வாய்த்ததும் சரி இல்லை என்பார்கள் அப்படித்தான் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் நிர்வாகம்.

சுமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிஆர்ஓவாக பொறுப்பேற்ற அசின் குமார் தீபாவளி பண்டிகைக்கு வசூல் வேட்டையில் இறங்கி வாரி சுருட்டினார். மோட்டார் வாகன அலுவலகம் பிடிஓக்கள் டாஸ்மாக் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை என பத்திரிகையாளர்களை கவனிக்க வேண்டும் என்று சுமார் ஒரு கோடி வரை வசூல் செய்தாராம்.

கலெக்டரின் நண்பரான ஒரு தொழிலதிபர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்கா டெண்டர் பெற்றவரிடம் கூட கட்டிங் வாங்கி விட்டார் என்கிறார்கள். அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நீண்ட வருடங்களாக உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி குறித்து பிஆர்ஓ அஸ்வின் குமார் அவர் தரப்பு கருத்தை அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!