தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் பெயரைச் சொல்லி தனியார் நிறுவனத்திடம் 30 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில் ஏஐஜி மகேஷ் குமார் அதிரடியாக திண்டுக்கலுக்கு பணி செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மத்தியில் மட்டுமல்ல தலைமைசெயலக வட்டாரத்தலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் மூர்த்தி.
யார் அந்த மகேஷ் குமார்?
வில்லிவாக்கம் பத்திரப்பதிவுத்துறை மாவட்ட பதிவாளாராக இருந்தவர் மகேஷ் குமார். இவர் சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் அருகில் உள்ள
டாட்டா நிறுவனத்திற்கு சொந்தமான tcs க்கு 17.22 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை செயற்கை நுண்ணறிவு தரவுகளை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியது டிசிஎஸ் நிறுவனம். நிலத்தின் மதிப்பை சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் பார்த்தபோது அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது தெரியவந்தது. அந்த இடம் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலமாக உள்ளது.
ஏ.ஐ.ஜி மகேஷ் குமார்.
இந்த இடம் மாநில அரசு ஒன்றிய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது . அப்போது 17.22 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. அம்பத்தூரில் உள்ள 17.22 ஏக்கர் நிலத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் டாட்டாவின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான அரசாணையை பிறப்பித்தது . அப்போதும் பத்திரப்பதிவு செய்யவில்லை.
இதனால் இந்த நிலம் வகைப்படுத்தப்படாமல் மேய்க்கால் புறம்போக்காகவே இருந்தது. தற்போது டிசிஎஸ் நிறுவனம் மற்றொரு தனியார் நிறுவனமான செயற்கை நுண்ணறிவு தரவுகளுக்கான நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இரண்டு நிறுவனங்களுமே தனியார் என்பதால் அரசாணை பிறப்பிக்க முடியாமல் விடப்பட்டது. கண்டிப்பாக இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த இடத்தை ஏற்கனவே மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்கி உள்ளது. வேண்டுமென்றால் அரசாணையாக திருத்தி இருக்கலாம். ஒன்றிய அரசு டிசிஎஸ் நிறுவனத்திற்கு விற்கும் போது கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்போது அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்கும்.
ஐ ஜி தினேஷ் பொன்ராஜ்.
இதனால் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக மாற்றி குறைந்த மதிப்பு போட வேண்டும். அதனால் தான் டிசிஎஸ் நிறுவனம் பதிவுத்துறை அதிகாரிகளை நாடி உள்ளது. அந்தப் பகுதியில் தற்போது குறைந்தபட்ச நிலத்தின் மதிப்பு சதுர அடி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது அந்த இடத்தில் நிலம் மட்டுமல்லாது எட்டு மாடியில் கொண்ட ஐடி நிறுவன கட்டிடங்களும் உள்ளன. இதற்கும் சேர்த்து மதிப்பிட வேண்டும் ஆனால் சதுர அடி 3 ஆயிரம் ரூபாய்க்கு முடிக்க திட்டமிட்டு இருந்தார்களாம்.
அப்படி செய்தால் அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது . இதற்காக நிலம் உள்ள பகுதியை விலை குறைந்த மதிப்பு போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை குறித்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் மாவட்ட பதிவாளர் மகேஷ் குமாருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அவர் தான் மதிப்பை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர் .
ஏ.ஐ.ஜி மகேஷ் குமார்.
இந்த நிலையில் மகேஷ் குமாரின் பினாமியாக செயல்படும் இரண்டு வழக்கறிஞர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்களை சந்தித்து பேரம் பேசி உள்ளனர். பிரபல ஐஸ்கிரீமின் பெயரைக் கொண்ட ஒரு வழக்கறிஞரும் மேலும் ஆசீர்வாதம் வழங்கும் கிறித்துவத்தின் பெயர் கொண்ட ஒரு வழக்கறிஞரும் டி சி எஸ் நிறுவனத்தினரிடம் மகேஷ்குமர் சார்பாக இந்த இரண்டு வழக்கறிஞர்களை சந்தித்து ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். 17,1/2 ஏக்கர் நிலத்திற்கு 17, 1/2 அரை கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். அது தவிர அமைச்சர் மூர்த்தி பத்திரப்பதிவுத்துறை ஐஜி மற்றும் பல முக்கிய அதிகாரிகளுக்கு தர வேண்டும் எனவே மொத்தமாய் 30 கோடி ரூபாய் தந்தால் மூன்றே நாட்களில் இந்த பிரச்சனையை செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
தனது பினாமி வக்கீல்கள் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்களிடம் பேச வைத்த மகேஷ் குமார் வெற்றிகரமாக இந்த வியாபாரம் முடிந்து விடும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் நடந்தது பெரிய விபரீதம். டி சி எஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தமிழக தலைமைச்செயலாளர் முருகானந்தத்தை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறியுள்னர் . அவர் சிவந்த முகத்துடன் முதல்வரின் காதிற்கு தகவலை கொண்டு சேர்த்தார் .அதன் பிறகு முதல்வர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. எந்த தகவலும் எனக்கு தெரியாது என்று முதல்வரிடம் சரணடைந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தனது உதவியாளர் உடையார் சாமி யை அழைத்து சம்பந்தப்பட்ட மகேஷ் குமாரை விசாரிக்க சொல்லி இருக்கிறார். மகேஷ் குமாரை நேரில் அழைத்த அமைச்சரின் உதவியாளர் உடையார் சாமி சகட்டு மேனிக்கு மகேஷ் குமாரை திட்டி விளாசி தள்ளினாராம்.
கண்ணீர் விட்டு கதறிய மகேஷ் குமார் அமைச்சரின் உதவியாளர் உடைய சாமி காலில் விழுந்து கதறினாராம். தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சியதின் பேரில் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் வில்லிவாக்கத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார் என்கிறார்கள் அரசியல்வாதிகள்.
மகேஷ் குமார் பற்றி நாம் விசாரித்த போது அதிர்ச்சி தரம் பல உண்மைகள் நமக்கு கிடைத்தது. அவர் 2018 ஆம் ஆண்டு அம்பத்தூர் சார் பதிவாளராக பணியாற்றியபோது 1581 சதுர அடிகள் கொண்ட அதாவது காமராஜபுரம் ஜெயலலிதா தெரு டோபி காலனியில் உள்ள ஒரு இடத்தை தனது அப்பா தட்சிணாமூர்த்தியின் பெயரில் சைதாப்பேட்டையில் பதிவு செய்துள்ளார்.
இவர் அம்பத்தூரில் பணியாற்றிய போது அடித்த கொள்ளை சொல்லி மாளாது என்கிறார்கள். இவருக்கு பூர்வீகம் கடலூர் மாவட்டம் இவருடைய மண்டை கர்வம் ஊழியர்களையும் ஆவண எழுத்தர்களையும் அசிங்கமாய் பேசுவாராம், தனக்கு கட்டிங் வரவில்லை என்றால் அந்த பத்திரம் பதிவு செய்யப்படாது. அப்படி சம்பாதித்த சொத்துக்கள் தற்போதைய அந்த சொத்தின் மதிப்பு 2 கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவரது பினாமி வழக்கறிஞர்களான ஐஸ்கிரீமின் பெயர் கொண்ட ஒருவரும் ஆசீர்வாதத்தின் பெயர் கொண்ட ஒரு வழக்கறிஞரும் இவர் தமிழ்நாடு முழுவதும் எங்கு வேலை செய்தாலும் அவருக்கு பினாமியாக இவர்கள்தான் செயல்படுவார்களாம்.
முகப்பேர், மற்றும் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அருகில் சில இடங்களும் வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து மகேஷ் குமாரிடம் அவர் தரப்பு விளக்கத்தை கேட்க நாம் அவரை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. whatsappபில் இந்த செய்தி குறித்து உங்கள் விளக்கம் தேவைப்படுகிறது என்று விரிவாக நமது கேள்விகளை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை அவர் தரப்பு விளக்கத்தை நமக்கு அளிக்கவில்லை. எனவே பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் பெயர் சொல்லி 30 கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் கேட்ட விஷயத்தில் மகேஷ் குமார் பணி மாற்றம் செய்திருப்பது குறித்து அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
புதிய செய்தி.
ஏ ஐ ஜி மகேஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கிய ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன் தலை தப்பினால் போதும் என்று தலை தெரிக்க ஓடினாராம்.
மகேஷ் குமார் இந்த துறைக்கு வந்து இதுவரை சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருடைய சொத்து ஆவணங்களை விசாரித்து வருவதாகவும் அது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது,