chennireporters.com

பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் ஏர்டெல் எச்சரிக்கை.

பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கை
யாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பொது மக்களிடம் ஏர்டெல் அதிகாரி போல பேசி தங்களது கே.ஒய். சி.(K.Y.C) படிவத்தை புதுப்பித்து தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்து வருவதாக பல புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து மோசடி நபர்கள் மக்களை ஏமாற்றி தங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் போனுக்கு வரும் ஓ.டி. பி.(otp)என்னை யாருக்கும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!