உலகில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது.
டாக்டர்கள் அவரது குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று சோதனை முயற்சியாக அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் பொருத்தினர்.
இது மருத்துவ உலகின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.முதலில் அந்த நோயாளியின் ரத்தக்குழாய்கள் உடன் பன்றியின் சிறுநீரகத்தை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து உடலின் உள்ளே சிறுநீரகத்தை வைக்காமல் நோயாளியின் தொடையின் மேல் பன்றியின் சிறுநீரகத்தை வைத்து அவரது ரத்த குழாய்கள் உடன் இணைக்கப்பட்டு மூன்று நாட்கள் பராமரிக்கப்பட்டது.
அந்த மூன்று நாட்களும் வழக்கமான மனித சிறுநீரகத்தை போலவே பன்றியின் சிறுநீரகமும் செயல்பட்டுள்ளது.
அந்த நோயாளியின் உடலில் முன்பு இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்ததாகவும் அறுவை சிகிச்சைக்கு பின் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றி கண்டுள்ள அமெரிக்க டாக்டர்கள் உலகம் முழுவதும் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இது அதிகம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
பன்றியின் சிறுநீரகம் சுமார் ஒரு ஆண்டுகள் வரை மனிதர்களின் உடலில் சரியாக செயல்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட ஆய்வில் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அதே நேரம் மூன்று நாட்கள் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் நீண்டநாள் சோதனையான இந்த சோதனை மனிதர்கள் மூலம் சோதனை செய்வதே புதிய முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி மற்றும் வெற்றி பெற்றால் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருக்கும் லட்சக் கணக்கானோருக்கு இது பேருதவியாக இருக்கும்.
உறுப்புகளின் பற்றாக் குறையை நீக்கும் வகையிலும் இந்த சிகிச்சை இருக்கும் என்று கூறப்படுகிறது.