என்னைப் பற்றி தவறான பொய் செய்திகளை பரப்பி வரும் ஊடகங்களை கண்டித்தும் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர ஆணையரிடம் அன்னபூரணி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்நான் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மீக தீட்சை கொடுத்தும் ஆன்மீக பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.
கடந்த 19ஆம் தேதி செங்கல்பட்டு வாசுகி மஹாலில் ஆன்மீக பயிற்சி வகுப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 24ஆம் தேதி அன்று டிவி சேனல்களில் என்னைப் பற்றியும் என் ஆன்மீக சேவையை பற்றியும் தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து பல்வேறு டிவிகளும் சமூக வலைதளத்திலும் என்னைப்பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டது.அதைத்தொடர்ந்து நான் ஆன்மீக சேவை செய்யக்கூடாது என்று பல பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் மூலமும் என்னை மிரட்டி வருகின்றனர்.மேற்கண்ட செயல்களால் எனது ஆன்மீக சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.எனது நற்பெயருக்கும் புகழுக்கும் வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே எனக்கும் எனது சீடர்கள் உயிருக்கும் எந்நேரமும் அச்சுறுத்தலும் ஆபத்தும் இருந்து வருகிறது.ஆகவே குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது சீடர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அன்னபூரணி கமிஷனரிடம் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது.