chennireporters.com

#amma sentiment Viral duraimurugan; அம்மா சென்டிமென்ட் வைரலாகும் துரைமுருகன் பேச்சு.

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மாவைப் பற்றி உருக்கமாக பேசி கண்கலங்கினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோழி முட்டையை விற்று கரண்ட் பில் கட்டினேன், ஆட்டுக்குட்டியை விற்ற பிறகு கூட கல்லூரி பீஸ் கட்ட முடியாத எனக்கு 500 ஏக்கரில் இன்று சொந்தமாக கிங்ஸ்டன் என்று பொறியியல் கல்லூரி இருக்கிறது. பின்பக்கம் கிழிந்த டவுசர் போட்டுக் கொண்டு அலைந்த என்னிடம் இன்று சர்வதேச பள்ளி இருக்கிறது. உடைந்த ஓட்டை மாற்ற முடியாத வீட்டில் வாழ்ந்த எனக்கு இன்று ₹2,000 கோடி முதலீட்டில் கட்டுமான நிறுவனம் இருக்கிறது. ஒரு சதுர அடி நிலம் கூட சொந்தமாக இல்லாத எனக்கு இன்று ₹5,000 கோடி மதிப்பீட்டில் இரண்டு கட்டுமான நிறுவனங்கள் இருக்கிறது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

ஒரு கிராம் தங்கம் கூட இல்லாமல் விளக்குமாற்று ஈக்கை முறித்து காதில் உள்ள ஓட்டையில் குத்தி வைத்த என்னுடைய தாயார் இப்போது உயிரோடு இருந்திருந்தால் என்னிடம் இருக்கும் 10 கிலோ தங்கத்தைப் பார்த்து பரவசமடைந்திருப்பார்.

வெறும் 13 ரூபாய் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் காட்பாடியில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரிகளில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே பயணம் செய்து வந்த என்னுடைய வீட்டில் இன்று அமலாக்கத்துறை 13 கோடி ரூபாய் நோட்டு மூட்டைகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்னும்போது எனக்கு பூரிப்பாகவே இருக்கிறது.
(காய்கறி மூட்டை, டூ பண மூட்டை)

இப்படி ஒன்றுமில்லாத எனக்கு இன்று ₹10,000 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் இருக்கிறது…

இதை எல்லாம் எனக்கு வாரி வழங்கியது இந்த திராவிட இயக்கம்தான் என்னும் நிலையில் என் உயிர் உள்ளவரை இந்த திராவிட இயக்கத்தை நான் மறக்கப் போவதில்லை…” இவ்வாறு அந்த பதிவில் கூறப்படுடள்ளது.

இதையும் படிங்க.!