chennireporters.com

#employer who cheats newspaper staff ; பத்திரிகைஊழியர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றும் முதலாளி.

பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஐந்து மாதம் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் செய்தி இணையதளம் குறித்து தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தான் தற்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பத்திரிகை முதலாளிக்காக அந்த நிறுவனத்திற்காக ஊழியர்கள் தங்களுடைய வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி வேலை பார்த்தாலும் கூட போதியமான ஊதியம் தரப்படாமல் கடைநிலை ஊழியர்களாகவே பத்திரிகையாளர்களின் வாழ்க்கை சிதைந்து போகிறது.
மெய்நிகர் நிர்வாகத்தின் இயக்குனர் சத்தியமூர்த்தி.
இருப்பினும் பத்திரிகையாளர்களாகவே வாழ்ந்தவர்கள் வேறு தொழிலுக்கு போகாமல், வேறு தொழில் தெரியாமல் குறைந்த சம்பளமாக இருந்தால் கூட ஒரு நிறுவனத்தில் பணிக்கு செல்ல விரும்பி தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இதை அறியாத ரத்தம் குடிக்கும் பத்திரிகை முதலாளிகள் ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கும் அட்டையை போல உழைத்த வேலைக்கு சம்பளத்தை தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தின் முதலாளிகளை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டிக்க வேண்டும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் சட்ட ரீதியாகவும் அணுக வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் பத்திரிகை சங்க நிர்வாகிகள்.
என்ன புகார் எந்த நிறுவனம் என்ன செய்தி என்பதை தற்போது பாதிக்கப்பட்ட ஊழியர் கொடுத்த புகாரை அப்படியே நமது வாசகர்களுக்கு நாம் வழங்குகிறோம். சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் உறுப்பினரின் 1853 என்பவர் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சந்திரிகா அவர்களுக்கு ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மெய்நிகர் என்ற இணையதள செய்தி நிறுவனம் தங்களின் சம்பளத்தை தராமல் இழுத்தடிக்கிறது. அந்த சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறேன் நான் “BRIO” தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த போது மெய்நிகர்  என்ற தனியார் நிறுவனத்தினர் எங்களை அணுகினர்.
அதிமுக ஐடி விங்கின் உடன் இணைந்து செயல்பட போவதாகவும் 2026 ஏப்ரல் மாதம் வரை கண்டிப்பாக வேலை இருக்கும் என்றும் அவர்கள் உறுதிமொழி அளித்ததின் அடிப்படையில் நானும் எனது குழுவினரும் கடந்த அக்டோபர் மாதம் 2025 மெய்நிகர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். இருப்பினும் அந்நிறுவனம் அளித்த வாக்குறுதியை மீறி டிசம்பர் மாத பாதியிலேயே நிதி நெருக்கடியை காரணம் காட்டி அனைவருக்கும் சம்பளம் வழங்க முடியாது என தெரிவித்தனர். நிர்வாகத்தின் சூழலை புரிந்து கொண்டு எந்த பிரச்சினையும் செய்யாமல் நாங்கள் பணியில் இருந்து விலகினோம்.எடப்பாடி க. பழனிசாமி - தமிழ் விக்கிப்பீடியா
எடப்பாடி கே. பழனிசாமி.
அப்போது எங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை சம்பள பாக்கி ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாக முழுமையாக கொடுத்து விடுவதாக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் பணி விலகி பல மாதங்கள் ஆகியும் இன்றுவரை எங்களது உழைப்பிற்கான ஊதியத்தை அந்த நிறுவனம் எங்களுக்கு வழங்கவில்லை. இதனால் நானும் எனது குழுவினரும் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எங்கள் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. பலமுறை நாங்கள் சம்பளத்தை கேட்டு நிர்வாகத்தை அணுகிய போது முறையான பதிலை நிர்வாகம் எங்களுக்கு வழங்கவில்லை.
எனவே பத்திரிகையாளர் நலன் காக்கும் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட மெய்நிகர் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு வரவேண்டிய சம்பளத் தொகையை உடனடியாக பெற்றுத் தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். இப்படிக்கு சண்முகசுந்தரம் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சண்முகசுந்தரம்.
இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட மெய்நிகர் நிர்வாகத்திடம் பேச நாம் பலமுறை முயற்சித்தோம் ஆனால் அவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த ஐந்து மாதமாக பலமுறை நிர்வாகத்தை கேட்டும் தேர்தல் காரணத்தை காட்டி காலம் தாழ்த்தி வந்த நிர்வாகம் தற்பொழுது அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி பேச்சில் மாற்றம் ஏற்பட்டு பலரை இழுத்தடித்து மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
அதில் குறிப்பாக சண்முகம் என்பவர் எளிமையான ஊழியர் பல பத்திரிகைகளில் பணியாற்றியவர் அவர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார். அவருக்காகவது உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டும் கூட மனம் இறங்காத சதிகார அதிகாரப் போக்கு கொண்ட நிர்வாகம் அவருக்கு இதுவரை சம்பளத்தை வழங்கவில்லை.
செய்தித் துறை அமைச்சர் ராஜமோகன்.
எனவே மெய்நிகர் நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜமோகன் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக ஊழியர்களின் சம்பளப் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இல்லை என்று சொன்னால் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஒரு கண்டன கூட்டம் அந்த நிறுவனத்திற்கு எதிராக நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மெய்நிகர் நிர்வாகத்தின் இயக்குனர் சத்தியமூர்த்தி.
எனவே உடனடியாக தங்கள் நிறுவனத்திற்கு உழைத்த ஊழியர்களுக்கு மெய்நிகர் நிர்வாகத்தின் இயக்குனர் சத்தியமூர்த்தி உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும். ஏழை பத்திரிகையாளர்களின் நிலையைக் கண்டு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.
குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெரிக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட தொடங்குவதற்கு முன்பு நிர்வாகம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் கோரிக்கை. எனவே மெய்நிகர் நிர்வாகம் உடனடியாக ஊழியர்களின் சம்பளப் பணத்தை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க.!