chennireporters.com

வெள்ளத்தின் நடுவே சிக்கி தவிக்கும் ஆஞ்சநேயர் கோயில்..

தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் குடியாத்தம் நகரை சூழ்ந்துள்ளது 1991க்கு பிறகு 2021ல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடியாத்தம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலும், சிலையும்வெள்ளத்தில் சிக்கியுள்ளது.பொதுவாக கிராமங்களில்கோயில் கட்டுவதாக இருந்தால்சாலையோரத்தில் கட்டுவார்கள் அல்லதுஊருக்கு மத்தியில் அல்லது மலை மீது கட்டுவார்கள்.

குடியாத்தம் கிராமத்தில் ஆற்றின் நடுவே கோயில் கட்டியுள்ளார்கள்.ஆற்றில் வெள்ளம்கரை புரண்டு ஓடினாலும், கோயிலுக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பது மற்றுமொரு அதிசயம்.

குடியாத்தம் நகரின் மையத்தில் ஓடும் கவுண்டன்ய மகாநதியில் உள்ளது.கோபாலபுரத்தையும், சந்தப்பேட்டை பஜாரையும்இணைக்கும் தரைப்பாலம் அருகே கவுண்டன்ய மகாநதியில சில மீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது.

1990-ஆம் ஆண்டில் ஒரு நாள் குரங்குகள் சந்தப்பேட்டையில் முகாமிட்டிருந்தன.இதில் ஒன்று மின்சாரத்தில் அடிபட்டு இறந்தது.இதை கண்ட அந்த பகுதி மக்கள் குரங்கை எடுத்து சென்று, ஆற்றின் நடுவில் புதைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர்,குரங்கை புதைத்த இடத்தில் தனக்கு கோயில் கட்டுமாறு கூறியுள்ளார் இதையடுத்து அந்த பக்தரும் சிறு கோயில் கட்டினார்.

இதைத் தொடர்ந்து 1991-ஆம் ஆண்டில் பலத்த மழை பெய்தது.அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் கரை புரண்டு ஓடியது.ஆற்றில் இருந்து சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு, லட்சுமி தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தின் மீதே வெள்ளம் ஓடியது.

அப்போது கரையில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் சென்றன.சிலவாரங்கள் கழித்து வெள்ளம் வடிந்த பின்னர் ஆஞ்சநேயர் கோயிலின் கோபுர கலசம் வெளியே தெரிந்தது.

சில நாள்கள் கழித்து வெள்ளம் வடிய வடிய கோயில் முழுவதும் தெரிந்தது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் கோயிலுக்கு ஒரு சிறு சேதாரம் கூட நிகழவில்லை என்பதுதான்.இதையடுத்து பக்தர்கள் திரண்டு கோயிலை பெரிதாக கட்டினர்.

இப்போது கோயிலுக்கு சுற்றுச்சுவர் மற்றும் தியானம் செய்ய இடம் என பல்வேறு வசதிகள் உள்ளன 30அடி உயரத்துக்கு பெரியஆஞ்சநேயர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.சனிக்கிழமைகளில் விசேஷப் பூஜைகள் உண்டு.

அனுமன் ஜெயந்தி, புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.இந்த அதிசய ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் வேண்டினால் வேண்டும் வரம் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறியதற்கு பரிகாரமாக வெற்றிலை மாலை, வெண்ணைய், நெய் கொடுத்து காணிக்கையை பக்தர்கள் செலுத்துகின்றனர்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றினால், அடுத்த ஆண்டிலேயே நிறைவேறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

அப்படிப்பட்ட சக்தி வாங்கிட ஆஞ்சநேயர் கோயில் தற்போது பெய்து வரும் கனமழையின் பெரும் வெள்ளத்தால் கோயில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது.

இதையும் படிங்க.!