Chennai Reporters

அரசியல் நாகரிகம் தெரியாமல் கோபத்தில் பேசுகிறார் அண்ணாமலை சிபிஎம் மாநில செயலாளர் அறிக்கை.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை அதைத்தான் அவர் செய்திருக்கிறார் மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல.

தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை. அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா? முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிரைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

ஆனால், அதை மறைத்து – தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!