அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? என்று சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.
உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என, திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார் அதில் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம்-மன்னிப்பு கோரினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா உரிமையாளர் ஸ்ரீனிவாசன் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு குறித்து வீடியோ வெளியானது. தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அண்ணாமலை வெளிப்படையாக மண்ணிப்பு கேட்டுள்ளார். இப்படி பல வீடியோக்கள் ஆடியோக்களை ஏற்கனவே அண்ணாமலை சொல்லி அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டபோதெல்லாம் அண்ணாமலை மண்ணிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்!
அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவக உரிமையாளர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரினார். நாங்கள் மிரட்டி அழைத்து வந்தோம் என்பதில் உண்மை இல்லை; “யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை. ஹோட்டல் நிர்வாகத்தை பாஜக தரப்பில் இருந்து மிரட்டவில்லை
ஜி.எஸ்.டி.யால் நாடே பாதிக்கப்பட்டது போல் உணவக உரிமையாளர் பேசிய வீடியோ வைரலானது. ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர் பதில் அளித்தார் என்று கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
“என்ன ஒரு ஆணவம்..!“என்ன ஒரு ஆணவம்..! என்று கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெறியிடப்பட்டுள்ளது. அதில் இது தான் அவர்களின் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.. அன்னபூர்ணா சீனிவாசன் எழுப்பிய கேள்வி நியாயமானதுதான். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். என்பது தான் உண்மை. என்ன ஒரு ஆணவம்! என்று X பதிவில் கூறப்பட்டுள்ளது. கேரள காங்கிரஸின் X தள பதிவு.
அன்னபூர்ண உரிமையாளர் மன்னிப்பு கேட்கப்பட்ட விஷயத்தில் சமூக வலைதளங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பல்வேறு கமெண்ட்டுகள் பதிவு செய்யப்பட்டும் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தங்களது கண்டணத்தை பதிவு செய்து வருகின்றனர். அதில் தேர்தலில் நின்று போட்டியிடாமல் மக்களை சந்திக்க பயப்படுகிற ஒருவர் மக்களை நேரடியாக சந்திக்காமல் வெற்றி பெற்ற நிர்மலா சீதாராமன் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் பேசுவது கண்டனத்துக்குரியது. பல்வேறு முட்டாள்தனமான பதில்களை பல கட்டங்களில் நிர்மலா பேசியிருக்கிறார் என்பதை நினைவு படுத்தியும் பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.