அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு; அவரது மகன் 2வது குற்றவாளியாகவும்.
மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்ப்பு.ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.