chennireporters.com

திருவள்ளூர் அருகே மது கடைகள் திறப்பு. உற்சாகத்தில் குடிமகன்கள்.

ap wine

திருவள்ளூர் மாவட்டம் ஒட்டி ஆந்திர மாநிலம் பகுதிகள் உள்ளன.அங்கு ஊரடங்கு எதுவுமில்லை இன்று காலை திடீரென்று 6:00 மணி அளவில்   திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியை ஒட்டியுள்ள மகாராஜபுரம் என்ற ஆந்திர பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.

wine ap
மதுக்கடையில் வரிசையில் நிற்கும் குடி மகன்கள்.

இந்த கடைகளில் இன்று 6 மணிக்கு ஆந்திர அரசு தனது மதுபான விற்பனையை தொடங்கியது.ஆறு மணியிலிருந்து மதியம் 12 மணி வரை விற்பனை நடைபெறும் என்று கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே மதுக்கடைகளின் நேரத்தையும்,
மது கடைகளின் எண்ணிக்கையும் ஆந்திர அரசு குறைந்துள்ளது.

மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மது பானங்களின் விலையை பல மடங்கு அளவிற்கு விலையை உயர்த்தியது.தற்போது சீப் குவாட்டர் எனப்படும் சாதாரண மது வகை 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

jagan ap cm
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஏற்கனவே இந்த சீப் குவாட்டர் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.இதேபோல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு முழு பாட்டில் விலை தற்போது 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பீரின் விலை இப்போது 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அப்படி இருப்பினும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் காலை ஆறு மணிக்கே தமிழக பகுதியை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

கடை திறக்கப்பட்டதால் குடி மகன்கள் உற்சாகத்துடன் இரண்டு சக்கர வாகனங்களில் மகாராஜபுரம் சென்று மது வாங்க வரிசையில் நின்று காத்திருக்கின்றனர் பாதுகாப்பு பணிக்காக ஆந்திர போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் கனகம்மாசத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லா கிராமத்திலிருந்து ம் மது பிரியர்கள் சைக்கிள் மூலமும் மோட்டார் பைக் மூலமும் கடைக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க.!