chennireporters.com

ஆந்திர மதுக்கடைகளில் அலைமோதும் குடி மக்கள் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியில் உள்ள கிராமங்களில் ஆந்திர அரசு மதுபான கடைகளை திறந்துள்ளது காலை 6 மணி முதல் மதியம் 12 வரை விற்பனை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் லாக் டவுன் போடப்பட்டிருப்பதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது அதனால் சென்னை, திருவள்ளூர், திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், போன்ற பகுதியில் உள்ளவர்கள் கணமா சத்திரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட ஆந்திர மதுக்கடை களுக்கு மது வாங்க கார் மற்றும் பைக் மூலம் மது பிரியர்கள் வந்து நீண்ட நேரம் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

பாதுகாப்பு பணிக்கு போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் காலை முதலே வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது வாங்கி செல்கின்றனர்.

இது தவிர ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, வரதபாளையம், சத்தியவேடு, நாகலாபுரம், நகரி போன்ற பகுதியில் உள்ள கடைகளுக்கும் தமிழகத்திலிருந்து மது பிரியர்கள் சென்று மது வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் போன்ற பகுதிகளில் ஆந்திராவில் இருந்து மது வாங்கி தமிழகத்திற்கு வரும் வழியில் போலீசார் சோதனை செய்ததில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!