திமுக அரசு பதவி ஏற்றதும் சென்னை மாநகர காவல் துறையை மூன்றாக பிரிக்கலாம் என்று அரசு முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய இரு மாநகரங்கள் புதிய போலீஸ் காவல் மாநகரமாக உருவாக்கப்பட்டது.
இன்று புதிய போலீஸ் கமிஷனர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையில் சென்னை காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை காவல்துறையை திமுக அரசு பதவி ஏற்றதும் நிர்வாக வசதிக்காகவும் சட்டம் ஒழுங்கு கண்கானிப்பிற்காக சென்னை காவல்துறை பிரிக்கவேண்டும் என்று அரசு முடிவு செய்தது.
அதன்படி சென்னை மாநகரத்திற்கு சங்கர் ஜிவால் ஏற்கனவே கமிஷனராக பணியாற்றி வருகிறார்.புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல்துறைக்கு ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும்,
தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ஏடிஜிபி ரவியும் (கமிஷனர்களாக) சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் திங்கள் கிழமை அன்று பதவி ஏற்பார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.