chennireporters.com

#Tamil luminaries at the London Parliament; லண்டன் பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர்களுக்கு பாராட்டு விழா.

  #லண்டன் தமிழ்ச்சங்க சிறப்பு செய்தி#

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அறிஞர்கள் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

தேன் மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிச் செழித்திட வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் உன்னதக் கனவை நினைவாக்கும் ஒரு மகத்தான தருணம் இது.

தமிழைத் தமது உயிராகக் கருதி, மெய் வருத்தி இடைவிடாது உழைத்து வரும் தமிழ்ச் சான்றோர்களைப் போற்றும் ஓர் அற்புதமான பாராட்டு விழா!

உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கி, எண்ணற்ற அறிஞர் பெருமக்களை உலகுக்கு அளித்த பெருமைக்குரிய பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, மனித வாழ்க்கைக்கு இலக்கணத்தை வகுத்த செம்மொழியாம் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் இந்த இணையற்ற சிறப்பை, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ வேண்டிய ஒரு வரலாற்றுப் பெருமை மிக்க தருணம் இது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெறும் விழாவை, லண்டன் குரோய்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மற்றும் துணை மேயர் திரு. அப்பு தாமோதரன், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் மோ.பாட்டழகன், மற்றும் கோல்டு ஸ்மித் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த திரு. சிவா பிள்ளை ஆகியோர் இணைந்து செயல்படுத்தினர்.

இந்த நிகழ்வில், இங்கிலாந்து அரசின் மாண்புமிகு -அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, தமிழறிஞர்களை பாராட்டினார்கள்.

இவ்விழாவில் வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலமையில் மல்லை தமிழ் சங்கத் தலைவர் மல்லை சத்யா, செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, நாமக்கல் எம்.ஜி.ஆர்,  இலங்கை, மலேசியா ,சிங்கப்பூர் ,துபாய், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக, அறிஞர் முனைவர் மோ. பாட்டழகன் அவர்கள் தமது அயராத உழைப்பினால் எழுதிய ‘தன்னலம் இன்றி தழைத்த நிழல் அன்னை சரோஜினி சீனிவாசன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. சுற்றுசூழல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவ் ரீட் MP அவர்கள் இந்த நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்குரிய மரியாதைக்குரிய உமா குமரன் MP அவர்கள், இந்த நூலின் முதல் பிரதியையும், திருமதி சுமதி அவர்கள் இரண்டாம் பிரதியைபெற்றுக்கொண்டார்கள்.

இதையும் படிங்க.!