chennireporters.com

#Arakkonam DMK; கூட்டி கொடுத்த உடன் பிறப்பு. காட்டி கொடுத்த மனைவி.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரித்திதுபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் விவசாயி. இவரது மகள் பிரீத்தி(21). இவர் அரக்கோணம் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து அரக்கோணம் அடுத்த காவனுார் பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தெய்வா (எ) தெய்வச்செயல்(40). இவர் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரீத்தி கல்லுாரிக்கு செல்லும் வழியில் அவரை காரில் சென்று மடக்கி நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி தொடர்ந்து அவரை பின்தொடர்ந்துள்ளார்.


அதற்கு பிரீத்தி எனக்கு ஏற்கனவே திருமணமாகி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு கோர்டில் நிலுவையில் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு தெய்வச்செயல் பரவாயில்லை. நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நான் திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளேன் அதனால் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி மயக்கி உள்ளார். பின்னர் தெய்வச்செயல் தனது நண்பர்களுடன் பிரீத்தியை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி காரில் அழைத்துக்கொண்டு சோளிங்கர் அருகே உள்ள கரிக்கல் முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த பிறகு சில வாரங்கள் அவரவர் வீட்டில் தங்கியுள்ளனர்.

லாரி மோதி 4 வயது சிறுவன் பலி: தாய் கண் முன் நடந்த விபத்து! | Arakkonam  accident 4 year boy died - kamadenu tamil

ஒரு மாதம் கழித்து பிரீத்தியை அரக்கோணத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் தனது மனைவியை சில திமுக கட்சியின் முக்கிய பதவி வகிப்பவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரீத்திக்கு உடல்நிலை சரியில்லாததால் அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பரானா என்ற பெண் தெய்வச்செயல் ஏற்கனவே என்னை இரண்டாவதாக திருமணம்‌ செய்து 5 வருடம் என்னுடன் வாழ்ந்துள்ளார்.
எனக்கு முன்பு கனிமொழி என்கின்ற பெண்னை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக ஆதாரங்களுடன் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பிரீத்தி இது குறித்து தன் கணவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


அன்று முதல் தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், சில முக்கிய திமுக கட்சி நிர்வாகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி கொடுமை செய்ததால் பிரீத்தி கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கும் தெய்வச்செயல் சென்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் பிரீத்தியின் பெற்றோர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அரக்கோணம் டிஎžஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் விசாரிக்க உத்தரவிட்டார். ஆனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் அலைகழித்து வந்து நிலையில் பாதிக்கப்பட்ட பிரீத்தி தனது பெற்றோருடன் நேற்று அரக்கோணம் எம்எல்ஏ ரவியை நேரில் சந்தித்து கதறி அழுதுள்ளார். அவர் இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசிய நிலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தெய்வசெயல் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலை மறைவாக உள்ள தெய்வச்செயலை தேடி வருகின்றனர். திமுக பிரமுகரின் இந்த மன்மத லீலை அரக்கோணம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகி தனது மனைவியை முக்கிய அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடன் நெருக்கமாக இருக்கச் சொன்னதாக அவரது மனைவி வெளிப்படையாகவே பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார் அவருடன் நிறைய பெண்கள் தொடர்பில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளிப்படையாக பொதுவெளியில் வந்து பேச தயங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது அது தவிர அவர் பாதிக்கப்பட்ட பெண்களை வெளியில் வந்து உண்மையை சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி வருவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொது வெளியில் வந்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் என்கின்றனர் அதிமுகவினர் எனவே போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும்வரை 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியதைப் போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது அங்கு கூட்டாக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்தனர் ஆனால் இங்கு ஒரே ஒரு திமுக நிர்வாகி திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை சீரடித்துள்ளார் என்கின்றனர் உள்ளூர் அதிமுகவினர்.

இதையும் படிங்க.!