திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.

December 11, 2021

By குணசேகரன் வே

திருவள்ளூர் கிளைச் சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்ட கைதி ஸ்டீல் டம்ளரால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபத்தான நிலையிலுள்ள குற்றம் சுமத்தப்பட்ட பிரபாகர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 46.

இவர்ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் வழக்கில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைதி பிரபாகரன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் ஸ்டீல் டம்ளரை கூர்மையாக்கி தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டார்.

உடனடியாக சக கைதிகள் அவரை பார்த்து கூச்சலிட்டதால் சிறைக்காவலர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

குணசேகரன் வே

December 11, 2021

Leave a Comment