chennireporters.com

#adgp orders; ரவுடிகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் ஏடிஜிபி உத்தரவு.

குற்ற பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ரவுடிகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் அறிவுறுத்தினார்.

கோவை சேலம் சரகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்ககள் தலைமை தாங்கினார். கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி உமா, கோவை சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அவர்கள் ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கோவை மண்டல ஐஜி பவானிஸ்வரி.

சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது மற்றும் ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் வாகன ஒட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் சாலை விபத்துகளை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திருட்டு வழிப்பறி ஆகிய குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் உள்ள குற்ற வரலாறு பதிவேடுகளில் இடம் பெற்றுள்ள ரவுடிகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிபாளர்கள் அவ்வபோது திடீர் ஆய்வு நடத்த வேண்டும் காவல் நிலையங்கள் மற்றும் காவல் குடியிருப்புகளில் பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சேலம் டி.ஐ.ஜி உமா.

இந்த கூட்டத்தில் காவல் கண்காணிபாளர்கள் ஸ்டீபன் ஜேசுபாதம் (தருமபுரி) தங்கதுரை ( கிருஷ்ணகிரி) ராஜேஷ் கண்ணன் (நாமக்கல்) அருண் கபிலன்( சேலம்) அபிஷேக் குப்தா(திருப்பூர்) ஜவகர்( ஈரோடு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!