chennireporters.com

கொடநாடு வழக்கில் சிக்க போகும் இளங்கோவன்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் ஆத்தூர் இளங்கோவன்.தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர்,

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என கடந்த ஆட்சியில் இருந்து இன்றைக்கு வரை அதிமுகவில் எடப்பாடியின் வலது கரமாகவும் பவர்ஃபுல்லாக இருப்பவர் ஆத்தூர் இளங்கோவன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக அப்போதே இளங்கோவனை சுற்றி பல சர்ச்சைகள் வலம் வர ஆரம்பித்தன.

ஆத்தூர் இளங்கோவன்.

தி.மு.க. ஆட்சி வந்த பின்னர் இளங்கோவன் மீது நிச்சயம் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீரென்று இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சேலம், சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவராக 2013 ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இளங்கோவன் பதவியில் இருந்தார்.

இளங்கோவன் அவரது மகன் மற்றும் பினாமிகள் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தி ருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூபாய் 30,24,000 சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 5,61,00,000 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்ப வருமானத்தை வைத்து பார்த்தால் சொத்து மதிப்பு 3.78 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இளங்கோவன் மற்றும் அவருடைய குடும்பத்தார் பெயரில் கணக்கில் வராத அளவு சொத்து சேர்ந்து இருக்கிறது.

இது அவருடைய மொத்த வருமானத்தை விட 131 சதவிகிதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் தெரிந்திருக்கிறது.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பணத்தை வைத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் சொத்துக்களை பினாமி பெயரில் இளங்கோவன் வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கல்லூரி மற்றும் கல்வி அறக்கட்டளை பெயரில் முதலீடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கிவரும் சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புத்திர கவுண்டம்பாளையத்தில் அரண்மனை போன்ற மிக பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் இளங்கோவன் பல கோடி மதிப்பீட்டில் கட்டியிருக்கிறார்.

சொந்த ஊரான புத்திரகவுண்டன்பாளையத்தில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார்.

சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு இளங்கோவன் வாங்கி குவித்திருக்கும் சொத்துக்களை கண்டு ஆடிப் போனார்களாம்.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரின் மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த ரெய்டில் இளங்கோவன் சிக்கியிருப்பது அ.இ.அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொடநாடு வழக்கில் சிக்க போகும் இளங்கோவன்.

எடப்பாடியின் வலதுகரமாக உள்ள இளங்கோவனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றிவளைத்து இருப்பது எடப்பாடிக்கு நெருக்கடியை தருகிற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சோதனை கருதப்படுகிறது.

இந்த சோதனையில் 27 கிலோ தங்கம் 282 கிலோ வெள்ளி இருப்பை விட கூடுதலாக வாழப்பாடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர் .

மேலும் வெளிநாட்டில் 47 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது இந்த ரெய்டு குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் எந்த வித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆத்தூர் இளங்கோவனுக்கும் கொடநாடு வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் ஆத்தூரில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த கொலைக்கும் இளங்கோவனுக்கும் தொடர்பு இருப்பதாக உளவுத்துறை முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இளங்கோவன் கனகராஜ் தற்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுவார் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.!