ஜனவரி 1ம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும் மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.
இதை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2022 ஜனவரி 1ம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
மற்ற ஏடிஎம்-களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”