chennireporters.com

#Auditor Muthukumar was executed; அமைச்சருக்கு தெரியாமல் கல்லாக்கட்டும் ஆடிட்டர் முத்துக்குமார்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு தெரியாமல் ஆடிட்டர் முத்துக்குமார் என்பவர் அதிகாரிகளின் பணி மாறுதலுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.  என்று நமது அலுவலகத்திற்கு பல புகார் கடிதங்கள் வந்துள்ளது. இது குறித்து நாம் சென்னை சைதாப்பேட்டை தெற்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினோம்.

அன்பழகன் மாளிகையில் இயங்கி வரும் அலுவலகத்தில் ஆடிட்டர் முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.  சென்னை பத்திரப்பதிவு டிஐஜியாக மீனாகுமாரி பணியாற்றி வரும் அதே இடத்தில் முத்துக்குமாரும் பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு 36 பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.இதில்  பத்திரபதிவாளர் மீனாட்சி என்பவர் பட்டுக்கோட்டைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். நீலாங்கரையில் பத்திரப்பதிவு அலுவலராக பணியாற்றிய மீனாட்சி பல கோடிகளை சுருட்டி கடந்த இரண்டு வருடங்களாகவே சென்னைக்கு பணி மாறுதல் கேட்டு பல அதிகாரிகள் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் மூலம் காய் நகர்த்தி வந்தர். ஆனால் அமைச்சர் தரப்பில் எந்தவித பச்சைக் கொடியும் காட்டாததால் மீனாட்சி அமைதியாக இருந்து விட்டார். இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் பர்சனல் பிஏவாக உடையார் சாமி என்பவர் இருந்து வந்தார். இவர் அமைச்சரின் அனைத்து டீல்களையும் இவர் தான் அலுவல் ரீதியாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

அது தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் சார்பதிவாளர்கள், துணை சார்பதிவாளர்கள், டிஐஜி, ஏஐஜி என பல முக்கிய அதிகாரிகள் அனைவரிடத்திலும் உடையார் சாமி சொல்லும் வேலைகளை சிறப்பாக செய்து கொடுத்தனர். அமைச்சருக்கு தெரியாமல் பல கோடிகளை சுருட்டியதால் அமைச்சர் தரப்பினர் உடையார்சாமியை  அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஓசூரில் பல ஏக்கர் நிலத்தை பதிவு செய்து கொடுத்ததில் மூன்று கோடி லஞ்சம் கேட்டு ஒரு திமுக விஐபியை உடையார் சாமி மிரட்டியுள்ளார். அவர் அமைச்சரை நேரில் சந்தித்து நடந்த அனைத்து விஷயங்களையும் விளக்கியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய பெயரை உடையார் சாமி தவறாக பயன்படுத்தி பல கோடிகளை சுருட்டிய விவகாரம் அமைச்சருக்கு தெரியவந்தது . அமைச்சருக்கு ஆகாத சார்பதிவாளர் மீனாட்சியிடம் சென்னைக்கு பணி மாற்றம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ரூபாய் 60 லட்சம் பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளார். ஆனால் மீனாட்சிக்கு பணி மாறுதல் வாங்கித்தரவில்லை தான் வாங்கிய லஞ்சப் பணம் 60 லட்சத்தையும் உடையார் சாமி திருப்பித் தரவில்லையாம்.

நேர்மையாக சம்பாதித்த பணம் இல்லை என்பதால் மீனாட்சியை இதை வெளியில் சொல்லாமல் அடக்கி வாசித்து வந்தார். அதேபோல அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை விற்பது தொடர்பாக ஏஐஜி மகேஷ்குமார் மற்றும் சார் பதிவாளர் பிரகாஷ்குமார் ஆகியோர், கோடி கணக்கில் லஞ்சப்பணம் கேட்ட விவகாரத்தில் இரண்டு தரப்பினரையும் நேரில் வரவழைத்து அடித்து மிரட்டி பல லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளார் உடையார்சாமி. இப்படி பல விவகாரம் ஒவ்வொன்றாக அமைச்சரின் காதில் விழத்தொடங்கியதும் உடையார் சாமியை முறுக்கை நொறுக்குவது போல் நொறுக்கி வெளியே அனுப்பி விட்டனர்.nelli murappanadu 400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் கோயில் குளத்தின் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள். - chennireporters.com

இந்த நிலையில் சென்னை டிஐஜி அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றும் முத்துக்குமார், மீனாட்சியிடம் 5 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் அமைச்சர் மூர்த்தியிடம் சொல்லி உங்களுக்கு பணி மாறுதல் வாங்கித்தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம். ஆனால் சார்பதிவாளர் மீனாட்சி தன்னால் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே தர முடியும் என்று ஒத்த காலில் நிற்கிறாராம்.

இந்த செய்தி தான் தமிழ்நாட்டின் பத்திரப்பதிவுத்துறையில் ஹாட் டாப்பிக்காக தற்போது பேசப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவதில் பெண் அதிகாரிகளே முதலிடத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள எந்த துறைகளாக இருந்தாலும் குறிப்பாக காவல்துறை, பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை போன்ற துறைகளில் பணியாற்றும் கடை நிலை பெண் ஊழியர்களில் இருந்து பெண் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவதில் எந்த தயக்கமும் பயமோ எதற்கும் அஞ்சுவதே இல்லை.

பத்திரப்பதிவுத்துறையில் இரண்டெழுத்து பெயர் கொண்ட அதிகாரி ஒருவர் 200 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம்.

இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரியாதாம். சில அதிகாரிகள் E.D க்கு புகார் அனுப்பி உள்ளனர்ராம் இதில் பத்திர பதிவு துறையில் ஊழல் பெருச்சாலிகளின் லிஸ்ட்டையும் குறிப்பிட்டுள்ளனராம். இதே போல பல லஞ்சப் பெருச்சாளிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கே மாதம் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை லஞ்சம் தருகிறார்களாம். அதனால் தான் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனராம்.

இந்த செய்தி தொடர்பாக ஆடிட்டர் முத்துக்குமார், சப் ரிஜிஸ்டர் மீனாட்சி அமைச்சரின் தனி உதவியாளராக இருந்த உடையார் சாமி ஆகியோர் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!