திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென்று வெள்ளை நிற ஆந்தை ஒன்று கீழே விழுந்து கிடந்தது.
இதனைப் பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில் கிடந்த அந்த ஆந்தையை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே வந்த வனத்துறையினர்.அந்த ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். உடல் முழுக்க அந்த ஆந்தைக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.
இது ஆஸ்திரேலியா நாட்டு ஆந்தை.இது அரியவகையை சேர்ந்ததுஎன்றும் பிற பறவைகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.