chennireporters.com

பணத்தை வாரி சுருட்டும் ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

சப்-ரிஜிஸ்டார் மல்லிகேஸ்வரி

இவர் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் துணை பத்திரப்பதிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.ஆவடியில் கடந்த மூன்றரை (3.1/2) ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை மல்லிகேஸ்வரி மீது பல புகார்களை பத்திரப்பதிவு துறை தலைவர் சிவன் அருள் , துணை பதிவுத்துறை தலைவர் சேகர்.

உதவி பதிவுத்துறை அதிகாரி கீதா உட்பட லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி சி.பி.சி.ஐடி என பல்வேறு போலீஸ் துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை சப்-ரிஜிஸ்டார் மல்லிகேஸ்வரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அது தவிர இந்த 3.1/2 ஆண்டுகளில் ஒருமுறைகூட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவடியில் சோதனை நடத்த வரவில்லை*

லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளுக்கு மல்லிகேஸ்வரி மாதமாதம் மரியாதை செய்து வருகிறாராம்.

அது தவிர தனது துறையிலுள்ள மூத்த அதிகாரிகளுக்கும் மரியாதை நிமித்தமாக லஞ்சமாக இல்லாமல் சன்மானம் வழங்கி வருகிறாராம்.இவருக்கு சென்னை முகப்பேர் மற்றும் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் வீடுகள் இருக்கின்றனவாம்.

அதன் மதிப்பு கோடிகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் மல்லிகேஷ்வரியின் பினாமிகள் சிலர்.கடந்த 2019ம் ஆண்டு மல்லிகேஸ்வரி TN20CR6567 ERTIGA SMART HYBIRD ZXL+ புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.இவர் ஏற்கனவே திருவள்ளூரில் பணியாற்றிய போது செல்வ செழிப்புடன் இருந்தாராம்.

ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் 1700 ஏக்கருக்கு மேல் உள்ள ஆந்திராவை சேர்ந்த அமராவதி கிரேன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள இடத்தில் பல அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சியினர் போலியான ஆவணங்கள் தயார் செய்து பத்திர பதிவு செய்து வருகின்றனர்.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மல்லிகேஸ்வரியின் பினாமிகளாக சண்முகம் ஆபிஸ், ஜே,ஜே கிங்ஆபீஸ், சாரதாஆபீஸ், சின்னி ஆபீஸ், டி.சி.எஸ். போன்ற ஆவண எழுத்தர்கள் மல்லிகேஸ்வரிக்கு பினாமிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போது நிலவரப்படி கடந்த 15ஆம் தேதி மட்டும் எட்டு (8) சிறப்பு டாக்குமெண்ட் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.ஸ்பெஷல் டாக்குமெண்ட் என்றால் போலியான ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்யும் பத்திரத்திற்கு ஸ்பெஷல் டாக்குமெண்ட் என்று பெயர்.

மேற்படி ஏஜென்டுகள் தான் இன்றைக்கு எத்தனை பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும் எத்தனை டோக்கன்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்கள்.இவர்கள் ஒரு டோக்கன் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள்.

இந்த ஆன்லைன் டோக்கன்களை எல்லாம் நிர்வாகம் செய்வது டிசிஎஸ் ஆபிஸ் தான் அதன் மூலம் வரும் பணத்தை மல்லிகேஸ்வரி வீட்டிற்குச் சென்று மொத்தமாய் கொடுத்து வருவாராம் டி.சி.எஸ். ஆபிஸ் நிர்வாகி.

தற்போதைய நிலவரப்படி வரும் 30 ம் தேதி வரை எந்த ஆவணத்தையும் பத்திரப்பதிவு செய்ய ஆன்லைன் டோக்கன்கள் இல்லை.

ஆனால் மேற்சொன்ன டாக்குமெண்ட் ரைட்டர் அலுவலகத்தில் சென்று அர்ஜென்ட் டோக்கன் என்று கேட்டால் 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுப்பார்கள்.

ஆவடியில் மோரை கிராமத்தில் வீரா புரம் கிராமத்தில் உள்ள சர்வே எண்:
446, 448/13 என்ற இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அரசு ஆவணங்களில் புறம்போக்கு நிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடங்களுக்கு கைடுலைன் வேல்யூ பூஜ்ஜியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் மேற்கண்ட இடத்திற்கே மல்லிகேஸ்வரி மேற்கண்ட இடங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் என்பவர் பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு புகார் கடிதமும் எழுதியிருக்கிறார்.அதேபோல மோரை கிராமத்தில் உள்ள திருமலை நகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று அரசும் நீதிமன்றமும் பத்திரப்பதிவு துறையும் உத்தரவிட்டுள்ளது .இருப்பினும் அந்த இடத்தில் சில பேருக்கு இடத்தை பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மோரை கிராமத்தை சேர்ந்த மங்களம் என்பவரும் பத்திரப்பதி
வுத்துறை தலைவருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்திருக்கிறார்.

இன்றும் 24.11. 2021 அன்றும் பல சில ஸ்பெஷல் டாக்குமெண்ட் டுகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் டாக்குமெண்ட் என்றால் போலியான ஆவணங்களை தயார் செய்து பத்திர பதிவு செய்வதற்கு பெயர் தான் ஸ்பெஷல் டாக்குமெண்ட்அதில் ஒன்றுதான் வெள்ளானூர் கிராமத்தை சேர்ந்த ஆர்ச் அந்தோணி நகர் சர்வே நம்பர் 36 என்ற இடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இதுபோல பல முறைகேட்டில் மல்லிகேஸ்வரி சிக்கியுள்ளார்.இனி மேலாவது பத்திரப்பதிவு துறை தலைவரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோரை பஞ்சாயத்து தலைவர் திவாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சப்- ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரின் சொத்துக்களை ஆய்வு செய்து வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்ந்திருந்தால் அதை பறிமுதல் செய்து அந்த சொத்துக்களை முடக்கி அவரை சஸ்பெண்டு செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறனர்.

இதையும் படிங்க.!