நன்றி நீயூஸ் 24 கன்னடா.
இரண்டு மாதங்களில் கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு சிறுமி கர்நாடக அரசையும் அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுமி பேசியிருப்பது இதுதான் இந்த மக்களுக்கு அறிவு இருக்கோ இல்லையோ.! மக்கள் கொரோனாவால் செத்து மடிகிறார்கள் அதிகாரம் உள்ளவர்களிடம் சென்று ஆதரவு அளிக்குமாறு தெருவில் நின்று கெஞ்சுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களை உருவாக்குவதும் நாம் வளர்ப்பது நாம் அவர்களை ஏசுவதும் நாம் தான்.

பாஜக ஆட்சி சரியில்லை எடியூரப்பா சரியில்லை மோடி ஆட்சி சரியில்லை என்று போராடும் மூட கூட்டமே!! ரயில் சென்ற பின் டிக்கெட் வாங்குவது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும்யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது.
உங்கள் ஒரு ஓட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் இலாகா மந்திரி முதன்மை மந்திரி பிரதம மந்திரி ஆகலாம்.
ஆனால் உங்களுக்கு ஓட்டுரிமை வாங்கி தந்த டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை ஒன்றை உங்களுக்கு சொல்கின்றேன்.கேளுங்கள்.
ஓட்டு போடும் மக்கள் மிகவும் புனிதமானவர்கள் அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் தனது தாய்க்கு சமம் என்று சொல்லி இருக்கிறார்.
அன்று அவருடைய பேச்சை புரிந்து கொண்டு இருந்தால் இன்று நாம் இவ்வளவு கஷ்டப்படும் நிலைமை வந்திருக்காது.
ஓட்டுப்போடும் மக்களே கேவலம் ஒரு சேலை, வேஷ்டி, மது, போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு உங்களுடைய விலைமதிப்பற்ற ஓட்டினை விற்க வேண்டாம் என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.