chennireporters.com

இளம்பெண் பலாத்காரம் 2 பேரை சுட்டு பிடித்த பெங்களூர் போலீசார்.

பெங்களூர்:

இளம் பெண் ஒருவரை மிக கொடுமையாக இரக்கமின்றி கொடுமைப்படுத்தி அந்த இளம்பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்த கும்பல் இருவர் தப்பி ஓட முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருவரை பெங்களூர் போலீசார் சுட்டு பிடித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்புக்குள் பாட்டிலை ஒரு கும்பல் புகுத்துவதோடு கும்பலாக பலாத்காரம் செய்யப்படுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தன.

Dr.sharanapa i.p.s

இந்த தகவல் காவல்துறைக்கும் சென்றது இதையடுத்து பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் புகைப்படத்தை வைத்து அவர்கள் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என போலீசார் நினைத்தனர்.

அசாம் மாநில காவல்துறை இது தங்கள் மாநிலத்தில் நடந்த பலாத்காரம் என்று நினைத்து குற்றவாளிகள் தேட ஆரம்பித்தனர் ஆனால் சம்பவம் பெங்களூரில் நடந்தது என்பது தெரிய வந்தது போலீஸ் விசாரணையில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பணப் பிரச்சினை தொடர்பாக பெண்ணை வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு நடத்தி வந்துள்ளனர் இங்கு வைத்து பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர் என்ற என்று விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நடந்த இடத்தை காட்டச்சொல்லி போலீசார் அழைத்துச் சென்றனர்அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பி ஓட முயன்ற னர்எனவே அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்போது குற்றவாளிகள் காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர்அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக பெங்களூர் கிழக்கு டி.சி.பி. சரணப்பா தெரிவித்தார்.

இதற்கிடையில் மனித கடத்தல் மோசடி அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்வீட்செய்திருந்தார்.

பெங்களூர்போலீசார்வழக்குப்பதிவு செய்து சில மணி நேரத்திற்குள் இந்த கும்பலை கண்டுபிடித்துள்ளனர் 6 பேரில் 2 பெண்கள்இந்த கடத்தலின் பின்னால் பலர் இருப்பதாக அவர்கள் தகவல்களை வழங்கியுள்ளனர்.

அவர்கள் கேரளாவில் உள்ளனர் நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்துகிறோம். என்றும் பசவராஜ் பொம்மையா கூறினார்.

இதையும் படிங்க.!