chennireporters.com

உச்சத்தில் “சூரியன்” காணாமல் போன இலை வெற்றிக்களிப்பில் உடன் பிறப்புகள்.

தி.மு.க.வேட்பாளர் திவ்யா தமிழ்வாணன்

ஆவடி மாநகராட்சி தேர்தல் வரும் சனிக்கிழமை நடை பெற உள்ளது.48 வார்டுகள் கொண்ட ஆவடி மாநகராட்சியில் 20-வது வார்டில் போட்டியிடும் திமுகவை சேர்ந்த வேட்பாளர்.திவ்யா தமிழ்வாணன் வெற்றி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

20-வது வார்டில் உள்ள மேற்கு கோபாலபுரம், குறிஞ்சி நகர், தென்றல் நகர், வெங்கடாவரம், தண்டுரை, விவசாயத்தெரு, தேவர் தெரு, மாங்குளம், பிள்ளையார் கோயில் தெரு, சித்தேரிக்கரை, தெற்கு பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து குறைகளை விரைந்து முடித்து தருவதாக அந்தப் பகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக திவ்யாவின் கணவர் தமிழ்வாணன் திமுகவின் வட்டசெயலாளராக பணியாற்றி வருகிறார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இவரிடம் கேட்கும் உதவியை உடனடியாக செய்து தருவார்.

கோபாலபுரம் பகுதியில் சுடுகாடு இல்லை.அப்பகுதியில் யாராவது இறக்க நேரிட்டால் மக்கள் சுடுகாட்டிற்கு காந்திநகருக்கு தான் போக வேண்டும்.

அதற்கு உடனடியாக இடத்தை தேர்வு செய்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்து கோபாலபுரம் பகுதியிலேயே இடுகாடு மற்றும் சுடுகாடு நவீன மின் எரியூட்டு மையம் அமைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

அதுதவிர கால்நடை மருத்துவமனை சரியாக இயங்காமல் இருக்கிறது.அதை நவீனப்படுத்தி நிரந்தரமாக ஒரு மருத்துவர் மற்றும் உதவியாளரை முழு நேரமும் இருக்க ஏற்பாடு செய்யப்படும்.

20-வது வார்டில் இருந்த நூலகம் 19-வது வார்டுக்கு மாற்றப்பட்டது.அந்த நூலகத்தை மீண்டும் 20-வது வார்டு கொண்டு வந்து; அதை தரம் உயர்த்தி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும் வகையில் நவீனப்படுத்தி சீரமைக்கப்படும்.

அரசு பள்ளிக்கூடம் பழைய கட்டிடமாக இருக்கிறது.அது மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.அந்தப் பள்ளியை சீரமைத்து பள்ளியின் தரத்தை உயர்த்த ப்படும்.

இதுதான் முதல் தலையாய பணியாக இருக்கும் என்று உறுதியளித்திருக்கிறார் திவ்யா தமிழ்வாணன்.

தெற்கு பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கு தண்ணீர் டேங்க் அமைத்து தந்துள்ளார்.20-வது வார்டில் உள்ள இளைஞர்கள், பெண் குழந்தைகள், மற்றும் இளம் பெண்கள் ஆகியோருக்கு தற்காப்பு கலையை வளர்க்கும்.

விதமாக அவர்களுக்கு தனது சொந்த செலவில் சிலம்பம், கராத்தே, டேக்வாண்டோ, ஆகிய தற்காப்பு கலைகளை கற்றுத்தர பயிற்சியாளரை நியமித்து வாரம் இந்த வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வகுப்பு எடுக்கப்படும்.

எல்லா தெருக்களிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பொதுமக்கள் குப்பையை கொட்டுவதற்கு எளிதாக தனித்தனியாக குப்பை தொட்டிகள் அமைத்து தரப்படும்.

இருபதாவது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் அதாவது மின் இணைப்பு பெற்றுத்தருவது, நகராட்சியில் வரி கட்டுவது, பட்டா இல்லாதவர்களுக்கு தாலுகா ஆபீஸ் சென்று மனு எழுதிக் கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா வாங்கித் தருவது என பல பொது பணிகளை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறார் தமிழ்வாணன்.

அமைச்சர் நாசர்.

அந்தப் பகுதியில் மக்கள் தன்னெழுச்சியாக திவ்யாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தானாகவே ஒரு முடிவெடுத்து இப்போது வாழ்த்து சொல்லி வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.

திவ்யா தமிழ்வாணனுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான நாசர் அவர்களுக்கு தனது வெற்றியை அவரது கரங்களில் ஒப்படைப்பேன் என்கிறார் திவ்யா தமிழ்வாணன்.

இந்த தொகுதியில் அதிமுக தரப்பில் பலமான வேட்பாளரும் இல்லை.அவர்கள் கடந்த காலத்தில் மக்களுக்கான எந்த முக்கிய பணிகளையும் செய்து தரவில்லை.

எனவே ஆவடி மாநகராட்சியில் முதல் வெற்றியாக 20-வது வார்டு இருக்கும் என்று உடன் பிறப்புகள் வெற்றியை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க.!