நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவில் ஆளும் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 400 இடங்களை தனித்து பெரும் என்றும் சில செய்தி நிறுவனங்கள் 350 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அந்த கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணிகளின் தயவுசெயில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் அதாவது 500 லிருந்து1000 வாக்குக்கும் கீழ் குறைவான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ள 130 தொகுதிகளில் மறு வாக்கு நடத்த நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஜேபி-500 வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் மொத்தம் 30. 1000 வாக்குகளுக்கு கீழ் வென்ற தொகுதிகள் 100. ஆக மொத்தம் 130 தொகுதிகள். *தற்போது உள்ள கணக்கு படி பிஜேபி வென்றது -243* 243 தொகுதிகளில் 130 தொகுதிகளை கழித்தால் 113 தொகுதிகளில் தான் வென்று இருக்க வேண்டும். மோடி அவர்கள் அவர் தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் என்று முடிவு வர தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் மந்த நிலையை ஏற்படுத்தி எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
மதியம் ஒரு மணி முதல் இரவு வரை பிஜேபி 290 தொகுதிகளில் முன்னிலையும் காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதி என்பதாக இருந்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாட்களில் இருந்து நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ள வில்லை என்பது அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து.
எனினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பில் இந்த 130 தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த INDIA கூட்டணி நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இது நடந்து விட்டால் காங்கிரஸ் கட்சி மட்டும் 50 க்கும் மேற்பட்ட இடங்களை கூடுதலாக பெறும். ஏனெனில் அமித் சா எல்லா மாவட்ட தேர்தல் அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசியது தான் சந்தேகத்துக்கு காரணம். மறு வாக்கு எண்ணிக்கையில் INDIA கூட்டணி நிச்சயம் பெரும்பான்மை பெறும் என்கின்றனர் .
இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றபடுமா என்பது நாட்டு மக்களின் கவலை. வாக்கு மறு எண்ணிக்கை நடத்தப்படுமா? ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற தேசப்பற்று மிக்க நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் கவலையும் இதுவே பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் NDA-விற்கு கிடையாது!
”நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கொண்டிருக்கும் பா.ஜ.க தான் தங்களின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்து குடியரசு தலைவர் மாளிகைக்கு முதலில் அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கு மாறாக NDA அதை செய்திருக்கிறது. அது சட்டப்படி தவறானது. பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முன்மொழியும் சட்ட ரீதியான அதிகாரம் NDAவிற்கு கிடையாது. ”என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார்.
மோடியின் பேச்சுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவத் இன்னும் பாக்கி இருக்கிறது மோடி !
“நிச்சயமாக நாங்கள் கேட்போம். ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் இருக்கிறோம். சேகரித்ததும் நிச்சயம் வந்து உங்களை கேட்போம்!” -தேர்தல் முடிந்ததும் வாக்கு இயந்திரம் குறித்த சந்தேகங்களை யாரும் ஏன் கேட்கவில்லை என மோடி பேசியதற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.