chennireporters.com

#bjp devanathan 525 crore police investigation; தமிழக பிஜேபி வின் டிவி தேவநாதன் பொது மக்களிடம் சுருட்டிய ரூ. 525 கோடி போலீஸ் விசாரணை.

பொது மக்களிடம் வின் டிவி உரிமையாளரும் தமிழக பிஜேபியை சேர்ந்த தேவநாதன் பொது மக்களிடம் திருடி ஏமாற்றிய ரூ. 525 கோடி சுருட்டிய பணத்தில் தேவநாதன் உல்லாச வாழ்கை வாழ்ந்துள்ளார். மேலும் சொகுசு பங்களாக்கள் மற்றும் பிரமாண்ட மருத்துவமனை கட்டியுள்ளார். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் தீவிர வஇசாரணை நடத்தி வருகின்றனர்.

 

wintv devanathan arrest: 50 கோடி சுருட்டிய வின் டிவி உரிமையாளர் தேவநாதன்  கைது. - chennireporters.com

நிதி நிறுவன மோசடி தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு தேவநாதன் யாதவை நேரில் அழைத்து வந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2வது நாளாக நேற்றும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 கிலோ தங்கம் போக, மாயமான 297 கிலோ தங்கம் மற்றும் சுருட்டப்பட்ட பல கோடி ரூபாய் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது மகளுக்காக ‘வின் லைப் லைன்’ பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை தேவநாதன் யாதவ், பிரமாண்டமாக கட்டி வருவது தெரியவந்துள்ளது. மேலும் தொலைக்காட்சி ஊழியர்களை பயன்படுத்தி பினாமி பெயரில் சொத்துகள் குவித்ததும் அம்பலமாகியுள்ளது.
மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

wintv devanathan arrest: 50 கோடி சுருட்டிய வின் டிவி உரிமையாளர் தேவநாதன்  கைது. - chennireporters.com

இந்த நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தை பயன்படுத்தி தேவநாதன் யாதவ், தொலைக்காட்சியை தொடங்கி, சாதி பெயரில் கட்சி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி ஊழியர்களை பயன்படுத்தியும், பினாமி பெயரில் பல்வேறு தொழில்களை தொடங்கியும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் ரூ. 525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் யாதவ் மற்றும் அவரது தொழில் பினாமியான குணசீலன் மற்றும் தொலைக்காட்சி ஊழியர் மகிமைநாதன் ஆகியோரை கடந்த 14ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேவநாதனின் வலதுகரமாக இயங்கி வந்தவரும், பினாமியுமான சாலமன் மோகன்தாஸ் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 27ம் தேதி தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை போலீசார் 7 நாள் காவலில் எடுத்தனர். தொடர்ந்து 5 நாள் விசாரித்தனர். பிறகு, மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு தேவநாதனை நேற்று முன்தினமும், நேற்றும் நேரி்ல் அழைத்து வந்து லாக்கர்களை திறந்து சோதனை நடத்தி, ரகசிய லாக்கரில் இருந்து 3 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி, நிதி நிறுவனத்தின் அசையா சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

wintv devanathan arrest: 50 கோடி சுருட்டிய வின் டிவி உரிமையாளர் தேவநாதன்  கைது. - chennireporters.com

இந்த நிறுவனத்தின ரகசிய அறையில் முதலீட்டாளர்களின் 300 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 297 கிலோ தங்கம் எங்கே போனது என்று போலீசார் தேவநாதனிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர். அதேநேரம், நிதி நிறுவனத்தின் 18 வங்கி கணக்குகள், தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

விசாரணை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘150 ஆண்டுகள் பழமையான மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் தங்க முதலீடுகளை தேவநாதன் சிறுக சிறுக எடுத்து தனது பெயரிலும், பினாமி பெயரிலும் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்துள்ளார். எழும்பூரில் இயங்கி வந்த தனது தொலைக்காட்சி நிறுவனத்தை நிதி நிறுவனத்தின் கட்டிடத்தின் பின்புற பகுதிக்கு இடம் மாற்றம் செய்துள்ளார்.

wintv devanathan arrest: 50 கோடி சுருட்டிய வின் டிவி உரிமையாளர் தேவநாதன்  கைது. - chennireporters.com

அதன்பிறகு நிதி நிறுவனத்தின் ரகசிய அறையில் இருந்த 300 கிலோ தங்க கட்டிகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி களவாடியதாக கூறப்படுகிறது. பிறகு அந்த தங்க கட்டிகளை பயன்படுத்தி, பினாமிகள் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல நூறு ஏக்கர் நிலங்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், வெளிநாடுகளிலும், பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்தது.

மோசடி புகாரில் வின் டிவி தேவநாதன் கைது/ Win TV Owner Devanathan arrested
இந்நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் தங்களது முதிர்வு பணம் மற்றும் முதலீட்டு பணத்தை கேட்க தொடங்கியதும், தனது பாதுகாப்புக்காக தேவநாதன் யாதவ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை தொடங்கி, யாரும் கூட்டணிக்கு அழைக்காத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் வலிய சென்று கூட்டணியை ஏற்படுத்தி தன்னை யாரும் நெருங்காதபடி பார்த்துக் கொண்டார்.

அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் தொடக்கத்தில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று பலவிதமான புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் புகைப்படங்களை பெரிய அளவில் தனது அலுவலகத்தில் மாட்டி வைத்து அதன் மூலம் முதலீட்டாளர்களை மிரட்டி வந்ததும், ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

பாஜக தேவநாதன் யாதவிற்கு சொந்தமான 12 இடங்களில் சோதனை..!! கிடைத்த முக்கிய  ஆவணங்கள்..!! – Madhimugam

மேலும் தான் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி பல கோடி ரூபாய் பணத்தை தேர்தல் செலவு செய்தது போல் கணக்குக் காட்டியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிவகங்கை தொகுதியில் வேட்புமனு செய்யும்போது தனக்கு 300 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

அத்துடன், ‘வின் சோலார்’ என்ற பெயரில் எல்இடி விளக்குகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தை தேவநாதன் நடத்தி வருகிறார். தனது மனைவி மீனாட்சி பெயரில், ‘எம்’ யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வந்துள்ளார். இதேபோல் தனது நெருங்கிய கூட்டாளியான குணசீலன் போன்ற பினாமிகள் பெயரிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் தெரியந்துள்ளது.

தேவநாதன் கைது: `பாஜக கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தும் செயல்!' - திமுக  அரசுக்கு அண்ணாமலை கண்டனம்| TN BJP chief Annamalai condemns DMK govt after  his alliance party leader ...

தேவநாதன் மீது நேரடியாக ரூ.24.50 கோடி மோசடி புகார்கள் வந்து இருந்தாலும், அவர் கைது செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்டோர் போலீசில் இதுவரை புகார் அளித்துள்ளனர். அனைத்து புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற 2017ம் ஆண்டுக்கு பிறகு தேவநாதன் வாங்கி குவித்துள்ள அசையா சொத்துக்கள், பினாமி சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்ற அனுமதியுடன் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Economic Offenses Division Police Description about What is the action  taken against fraudulent companies

நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், கடந்த பல ஆண்டுகளாக விண் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார். அந்த தொலைக்காட்சியில் தேவநாதனுக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவர், மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அவரும் சென்னையில் ஒரு பிரமாண்டமான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

அதேபோல் தானும் ஒரு மருத்துவமனையை நடத்த வேண்டும் என்ற ஆசையில், நிதி நிறுவனத்தில் இருந்து சுருட்டிய பல கோடி ரூபாயை மருத்துவமனையில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளுக்கு ‘வின் லைப் லைன்’ என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை மிக பிரமாண்டமாக கட்டி வந்துள்ளார். மேலும் தி.நகரில் ஆடம்பர பங்களா, ஏராளமான வெளிநாட்டு கார்கள், பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடு, குதிரைப் பண்ணை என தேவநாதன் யாதவ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது

இதையும் படிங்க.!