நடிகையும் பாஜகவின் எம்.பியுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் வீரருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தொழிலபதிபர் ஷிவ்ராஜ் சிங் என்பவர் ரூ.1 லட்சம் பரிசும் அறிவித்துள்ளார். என்ன நடந்த்து என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சண்டீகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஹிமாசல பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி, பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க தில்லி புறப்படுவதற்கு கங்கனா, சண்டீகர் விமான நிலையம் வந்தார்.
விமானத்தில் ஏறும் முன் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின் போது, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகின்றது. மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள்’ என்றும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை ரூ.200, ரூ.300-க்கும் சென்று அமர்ந்திருக்கிறார்கள் என்று கொச்சையாக தெரிவித்த கருத்துக்காக நடிகை கங்கனாவை அந்தக் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கங்கனா ரணாவத்
கங்கனாவைத் தாக்கிய பெண் காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தொழிலபதிபர் ஷிவ்ராஜ் சிங் எனபவர் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். இதனிடையே, சிலர் வாக்குகளின் வழியாக தன் எதிர்ப்பை தெரிப்பார்கள். இன்னும் சிலர் கன்னத்தில் அடித்தும் தன் எதிர்ப்பை காட்டுவார்கள் என சிவசேனை (உத்தவ் தாக்கரே) பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது தாய் கலந்துகொண்ட விவசாயப் போராட்டத்தை பற்றி கொச்சையாக எவர் பேசியிருந்தாலும் மகளுக்கு கோபம் வரத்தான் செய்யும். சிலர் வாக்குகளின் வழியாக தன் எதிர்ப்பை தெரிப்பார்கள். இன்னும் சிலர் கன்னத்தில் அடித்தும் தன் எதிர்ப்பை காட்டுவார்கள். எனினும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர், சட்டத்தை கையில் எடுத்திருக்க வேண்டியதில்லை. கங்கானாவுக்கு நேர்ந்த சம்பவம் தவறு தான். எனினும் விவசாயிகளும் மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.
கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் காங்கிரசின் சின்னம் பதிந்துள்ளது என்று பலர் சமூக வலைதலங்களில் நெட்டிசன்கள் கமண்ட் அடித்து வருகின்றனர். இத்தகை சூழலில் குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம” என சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
விவசாயிகளை பற்றி தவறான கருத்துக்களை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்தார். காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கங்கனா வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது !.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும் அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். ஒருவரின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம். காரணம், மேற்கண்ட குற்றங்களிலும் அதுதான் நடக்கிறது.!
உங்களின் உளவியல் ரீதியான குற்றத்தன்மைகளை ஆழமாக பார்த்துக் கொள்ளுங்கள் தயவு செய்து யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமை நிறைந்த அனுபவமாக மாறிவிடும். அதிக வெறுப்பு மற்றும் பொறாமைகளை சுமப்பதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். முன்னதாக, பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது செய்து அவர் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் குல்விந்தர் தெரிவித்தார். காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக பலரும் அவரின் தைரியத்தையும் விவசாயிகளின் உணர்வை அவமானப்படுத்தி பேசிய எம்.பி.யை அடித்தது சரிதான் என்று நியாயப்படுத்தி பேசி வருகின்றனர். மகாராஸ்டிராவின் பெண் சிங்கம் என்று குல்விந்தர் கவுர் இந்தியாவின் தைரியமிக்க பெண் என்று உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் அடுத்த எம்.பி குல்விந்தர் தான் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.