chennireporters.com

#blackmailed reporters; அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட மாலைமுரசு மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை நிருபர்கள். தட்டி தூக்கி காப்பு போட காத்திருக்கும் போலீஸ்..

தேனியில் உள்ள அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட தின பூமி நிருபர் சின்னத்தம்பி, மாலை முரசு மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் நிருபர் ஆனந்தன் உள்பட ஆறு பத்திரிகையாளர்களை  போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பிராடு பத்திரிகையாளர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

1.கார்த்திக் சுதந்திர செய்தி நிருபர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரகாரம் தெருவில் குடியிருப்பவர் மருத்துவர் அனுமந்தன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அதுபோல் மருத்துவர் அனுமந்தன் தனக்கு சொந்தமாகப் பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் அம்மா ராமசாமி  என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

 

2.ஆனந்தன் மாலை முரசு மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகை நிருபர்

இந்த நிலையில் நிருபர்கள் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  மருத்துவர் அனுமந்தன், புகார் மனு அளித்துள்ளார்.

3. அழகர்சாமி தின காற்று நிருபர்

அந்த புகாரில், கடந்த வாரத்தில்  பெரியகுளத்தைச் சேர்ந்த நிருபர்கள் சின்னத்தம்பி,  ஆனந்தன், கார்த்தி, அழகர்சாமி,  ராஜா முத்து,  அழகர் ஆகிய ஆறு பேரும்  மருத்துவர் அனுமந்தனின் தனியார் க்ளினிக்கிற்கு சென்று தாங்கள் அனைவரும் நிருபர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, அனுமந்தனிடம், “உங்களது கிளினிக்கில் வேலை பார்க்கும் பல பெண்களை பாலியல் ரீதியாக நீங்கள் தொந்தரவு செய்துள்ளீர்கள்.

4. சின்னதம்பி தின பூமி நிருபர்.

இவர் ஓ.பி.எஸ். நடத்தும் புரட்சித் தொண்டன் நாளிதழின் தேனி மாவட்ட நிருபராகவும், ஓ.பி.எஸ்.ன் பி.ஆர்.ஓ.வாகவும் உள்ளார்.

அதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர்கள் அனைவரும் உங்கள் மீது புகார் கொடுக்க தயாராக உள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் பங்கு கொடுக்க வேண்டும். இந்த வீடி யோவை வெளியிட விடாமல் சரி கட்ட வேண்டும் என்றால் எங்களுக்கு ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என மிரட்டி பணம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

5. அழகர் தினம் முரசு நிருபர்

அந்தப் புகாரின் அடிப்படையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லூச்சாமி விசாரணை செய்தார். அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் நிருபர்கள் சின்னத்தம்பி, ஆனந்தன், கார்த்தி, அழகர் சாமி, ராஜா முத்து, அழகர் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6. ராஜா முத்து தந்தி பார்வை நிருபர்

இதனிடையே தலைமறைவாக இருக்கும் 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் தொழிலதிபர்கள் பல நிறுவன முதலாளிகளை மிரட்டி இவர்கள் பணம் கேட்டதாக தற்போது பல புகார்கள் சொல்லி வருகிறார்கள் அது தவிர சவுக்கு என்ற கஞ்சா சங்கர் உடன் கூட்டு வைத்துக் கொண்டு பல பேரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தேனி மாவட்ட மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள்.

இதையும் படிங்க.!