சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை பிரஸ் கிளப்பின் பெயரையும் அதன் முத்திரையையும் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று சென்னை பிரஸ் கிளப் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர்  விமலேஷ்வரன் மற்றும் அந்த சங்க நிர்வாகிகள் கடந்த 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்து சென்னை பிரஸ் கிளப் என்கிற பெயரையும் அதன் முத்திரையையும் கருப்பு மை பூசி அழித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் பல பத்திரிகையாளர் சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்படாத செயலாளராக பதவி வகித்து வந்த பெருமாள் என்கிற பாரதி தமிழன் மற்றும் அசதுல்லா ஆகியோர் தூண்டுதலின் பேரில் மூன்று குண்டர்கள் சென்னை பிரஸ்கிளப்பின் மூத்த உறுப்பினர் நெல்லை கோபால் என்பவரை அடித்து காயப்படுத்தினார்கள்.

அசதுல்லா மற்றும் ஜேக்கப்

இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கரின் ஆதரவாளர்களான பெருமாள் என்கிற பாரதி தமிழன் மற்றும் அவரது நண்பர் அசதுல்லா போலி கணக்கெழுதும் ஜேக்கப் போன்றோர் பற்றி பல  திடுக்கிடும் தகவல்கள்   பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . அந்த பதிவில் பத்திரிகையாளர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை நாம் அப்படியே பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி இருக்கிறோம்.

இந்த சங்கத்தில்  இது வரை மொத்த வருவாய் அதாவது  2 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக புதிய தகவல் ஒன்று  பூதாகரமாக வெடித்துள்ளது.

ந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்படாத இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த பெருமாள் என்கிற பாரதி தமிழன் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  அந்த கடிதத்திற்கு எதிர்வினையாக பல்வேறு  கேள்விகளை எழுப்பி வருகின்றனர் பத்திரிகையாளர்கள். எனவே தமிழக அரசு சவுக்கு சங்கரின் நண்பர்களான இந்த 420 கூட்டத்திற்கு எதிராக அசதுல்லா, பாரதி தமிழன்,  திருட்டு கணக்கு ஜேக்கப் போன்றோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பத்திரிகையாளர்களின் மொத்த சங்கத்தின் வருமானம் எவ்வளவு என்பதை பத்திரிகையாளர்களுக்கு வெள்ளை அறிக்கையாக அரசு வெளிப்படுத்த வேண்டும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்
நடப்பது என்ன???
——–
Journalist, Scoop, Source
போன்ற வார்த்தைகளின் கண்ணியத்தை கெடுத்து, இவை பிளாக்மெயிலிங் தொழிலுடன் சம்பந்தப்பட்டவை என்று கேவலப்படுத்திவிட்டார் சவுக்கு சங்கர். சவுக்கு சங்கரையும் அவரது கூட்டாளிகளையும் உருவாக்கி, பாதுகாப்பது சென்னை பத்திரிகையாளர் மன்றம். பத்திரிகையாளரான முத்தமிழறிஞர் கலைஞர், 1996 ஆட்சிக்காலத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்காக அரசாங்க இடத்தை சொற்ப வாடகைக்கு கொடுத்தார். அந்த இடத்தில் SRM நிறுவனம் கட்டடம் கட்டிக் கொடுத்தது. இதனை பிளாக்மெயிலர்களின் கூடாரமாக சீரழித்துவிட்டார், நியமன பொறுப்புக்கு நுழைந்த பாரதி தமிழன் என்கிற பெருமாள். முன்னணி பத்திரிகையாளர்களையும், TV ஊடகவியலாளர்களையும் யூடியூபர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க மறுக்கிறார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து விலகுவதாக ஒரு செட்டப் ராஜினாமா கடிதம் வெளியிட்டுள்ளார். பெருமாள் என்கிற பாரதி தமிழன் இது வெறும் கண்துடைப்பு. ஊழல் பட்டியல் தோண்டி எடுக்கப்படுவதால், தனது பிளாக் மெயில்
கூட்டாளிகளை முன்னால் நிறுத்திவிட்டு பின்னால் ஒளிந்துகொள்ளும் தந்திரம் இது. சவுக்கு சங்கர் உள்ளிட்ட பிளாக் மெயிலர்கள் மூலம் சென்னை பத்திரிகையாளர் மன்ற கூட்டாளிகள் சம்பாதித்த மொத்த சொத்து எவ்வளவு? பெருமாளின் வங்கிக் கணக்குகளில் உள்ள ஊழல் பணம் எவ்வளவு? பெருமாள் கட்டியுள்ள பங்களா படத்தை வெளியிட முடியுமா?

ஜேக்கப் வங்கி கணக்குகளில் உள்ள ஊழல் பணம் எவ்வளவு?
ஜெக்கப் கட்டியுள்ள பங்களா படத்தை வெளியிட முடியுமா? 23 ஆண்டுகால சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உண்மையான வருமானம் எவ்வளவு?

கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித் தொகைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப் பட்டது? அதில் எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? இதையெல்லாம் வெளிப்படையாக
நோட்டீஸ் போர்டில் ஒட்ட பாரதி தமிழன் என்கிற பெருமாளுக்கு தைரியம் இருக்கிறதா? சனிக்கிழமை ஜனநாயக ரீதியில் போராடிய மூத்த பத்திரிகையாளர்களை குண்டர்கள் வைத்து தாக்கியுள்ளார் பெருமாள். ராஜினாமா செய்யும்போது கூட, சீரமமைப்புக் குழுவுக்கே இனி முழு அதிகாரம் என்று அறிவிக்காமல், சவுக்கு சங்கர் கூட்டாளிகளே அடுத்து முக்கிய பொறுப்பு வகிப்பார்கள் என்ற ஏற்பாட்டை செய்து வருவது ஏன்?

பாரதி தமிழன் என்கிற பெருமாள் இது குறித்து விளக்க அறிக்கை வெளியிடுவாரா?

 பாரதி தமிழன் ராஜினாமா கடிதத்தில் இந்து ராம், நக்கீரன் கோபால் சாவித்திரி கண்ணன் ஆகியோருக்கு மட்டும் நன்றி தெரிவிக்கவில்லை இதுவே பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

23 ஆண்டுகாலம் தேர்தல் நடத்தாமல் கொள்ளையர்களின் கையில் சிக்கிய சங்கத்தின் ஒட்டுமொத்த வருமானம் எவ்வளவு என்பதை தெரிவிக்காமல் உடனடியாக ராஜினாமா செய்த அதற்கான காரணம் என்ன என்பதை விளக்கவில்லை. மேலும் ஒட்டுமொத்த பொறுப்பாளர்களையும் விலக்கிவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த பாரதி தமிழன் விரும்பாததற்கான காரணம் என்ன என்பதையும் அனைத்து பத்திரிகையாளர்களும் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அரசு தாமாக முன்வந்து ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும். அது தவிர தவறு செய்த நிர்வாகிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மூத்த உறுப்பினர்கள்.

பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, மன்றத்தின் செயல்பாடுகளை வழி நடத்திடவேண்டும் .பல ஆண்டுகளாக தற்காலிகமாக சுயேட்சையாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களின் பிடியிலிருந்து நிர்வாகப் பொறுப்புகளை மீட்டெடுக்கப்பட வேண்டும்.