27 ஆவது ஆண்டு மிஸ்டர் திருவள்ளூர் ஆணழகன் போட்டி பூந்தமல்லியில் நடை பெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை ஹரிப்பிரியா திருமண மண்டபத்தில் 27 ஆவது ஆண்டு மிஸ்டர் திருவள்ளூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. மதியம் 2மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாடி பில்டிங் ஜூனியர் சீனியர் ஜூனியர் மென்ஸ் பிசிக்ஸ் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது. 55 கிலோ முதல் 60 கிலோ பிரிவு எடை கொண்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அதே போல 65 லிருந்து 70 கிலோ மற்றும் 75 கிலோ எடை கொண்டவர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு எடை பிரிவினருக்கும் 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் திருவள்ளூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் தியாகராய கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஹேமந்த் என்பவர் ஜூனியர் பிரிவில் மூன்றாம் இடத்திலும் சீனியர் பிரிவில் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றார் .
வெற்றி பெற்ற இவருக்கு பரிசும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இவர் கடந்த ஒரு ஒருட காலமாக திருவள்ளூரை சேர்ந்த சம்பத் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வந்தார். அவர் வழிகாட்டுதலின் படி தான் வெற்றி பெற்றதாக ஹேமந்த் தெரிவித்தார்.