chennireporters.com

மருந்து வாங்க சென்றவரிடம் வழிப்பறி செய்து பணம் பறித்த எஸ்.ஐ. பணி மாற்றம்.

bala
பாலகிருஷ்ணன்.

திருவள்ளூர் அருகே மன நலம் சரியில்லாத மகனுக்கு மருந்து வாங்கச் சென்ற நபரிடம் வழிப்பறி செய்து 500 ரூபாய் பணம் பறித்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டார்.

இவர் திருவள்ளூர் பி.2 தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் போலீஸ் செக்போஸ்டில் பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த பாலகிருஷ்ணனை வழி மடக்கி ஏன் கொரோனா காலத்தில் ஊர் சுற்றுகிறாய் என்றும் ஏன் ஹெல்மெட் போடவில்லை என்று அபராத தொகை 2500 கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.

பாலாகிருஷ்ணன் தான் எதற்காக வெளியே வந்தேன் என்பதை சொல்ல விடாமல் எஸ்.ஐ வெங்கடேசன் பணம் வாங்கு வதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.சார் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.மகனுக்கு மருந்து வாங்க ஐநூறு ரூபாய் மட்டுமே உள்ளது என்று சொல்லியிருக்கிறார்.

nithish
சிறுவன் நிதிஷ்குமார்

சரி பரவாயில்லை அதை கொடுத்து விட்டு போ என்று மிரட்டி பணம் வாங்கி கொண்டு அனுப்பி உள்ளார்.அதன் பிறகு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று சி.எம்.ஒ @CMOTamilnaduஎன்ற முதல்வரின் டிவிட்டருக்கு புகார் அனுப்பி வைத்தார்.
அதன் பிறகே பட பட வென அதிரடியாக சினிமாவில் வரும் காட்சிகள் போல பல சம்பவங்கள் நடந்தது.

மருந்து வாங்க பாலகிருஷ்ணன் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தையும் அவர் என்ன மருந்து வாங்கச் சென்றார் அந்த மருந்தையும் வாங்கி வந்து போலீசார் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து கொடுத்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து திருவள்ளூர் டி.எஸ்.பி துரைப்பாண்டியன் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் பாலகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!